பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலக் கலைகள் 69 வீணையை மகேந்திரவர்மன் கண்டுபிடித்திருக்கிருன். பண் களை எட்டு நரம்புகள் கொண்ட வீணையிலும் வாசிக்கலாம் என்ற நிலை இவனல்தான் ஏற்பட்டது. சித்தன்ன வாசல் குகை ஓவியங்களின் தோற்றத்தி லிருந்து இவன் காலத்தில் நடனக்கலையும் நல்ல நிலையில் இருந்ததை அறிய முடிகிறது. காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலிலும் நடனக் கலையைப் பற்றி இரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. நாதாந்த நடனம் லதா விரிசிக நடனம் போன்ற நடனங் கள் சிறப்புற்றிருந்தன. பல்லவர் காலத்துக் கோவில் களில் இசை, நடனக் கலைகளைச் சிறப்பிப்பதற்கு என்றே பல கலைஞர்கள் இருந்தனர். அவர்கள் அடிகள் மார், மாணிக்கத்தார், கணிகையர் என்று பல்வேறு பெயர்க ளால் குறிக்கப்பட்டார்கள். இவ்வாறு பல்லவர் ஆட்சிக்காலம் என்பது பல கலைச் செழிப்புக்கும் நிலைக்களகை விளங்கியிருக்கிறது. கல்வியும் கலைகளும் அவ்வாட்சிக் காலத்தில் கைகோத்து வளர்ந் திருக்கின்றன இசையும், நடனமும் இணைந்து சிறந்திருக் கின்றன. காவியமும் நாடகமும் கவின்பெற வளர்ந்திருக் கின்றன. சிற்பமும் ஒவியமும் செவ்விதின் ஓங்கியிருந் திருக்கின்றன. மொழிகள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. பெளத்த, சமண, சைவ, வைணவப் புலவர்கள் பல பக்திப், பாடல்களையும் நூல்களையும் பல்லவர் காலத்தில் இயற்றி யிருக்கின்றனர். சமய வளர்ச்சியை ஒட்டிக் கலை பண் பாட்டுத் துறைகளின் வளர்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. களப்பிரர் காலத்தை இருண்ட காலம்'-என்று குறிப்பிடு, வது போலப் பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தைத் தமிழகத்தின் கலைவளர்ச்சிக் காலம்’ என்று துணிந்து கூற. முடியும். அப்படிக் கூறினல் அதில் ஒரு வார்த்தையும் கூட மிகையாக இராது. இ-5.