பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலத் தமிழின் சிறப்பியல்புகள் திராவிட மொழிகள் அனைத்தினும் தமிழே உயர் தனிச் செம்மொழி என்பதை அறிஞர் அனைவரும் ஒரு மனமாக ஒப்புக் கொள்கின்றனர். மொழி வரலாற்றின்படி ஆரா யப்புகுந்தால் அத்தமிழ் மொழியும் சங்ககாலத்தில் வழக்கி விருந்த நிலைமை ஈடு இணையற்ற சிறப்பை விளக்குகிறது. மொழியியல் நோக்கில் இல்லாவிடினும் வேறு நோக்கில் தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரும் சங்கத் தமிழும் பிற் காலத் தமிழும்' என ஒரு நூலே எழுதியிருக்கிருர், மொழி யியல் நோக்கில் தொல்காப்பியத் தமிழின் போக்குகளே சங்ககாலத் தமிழின் சிறப்பியல்புகள் என ஆராய்ச்சி செய்து பேராசிரியர் தெ. பொ. மீ. போன்ருேர் கூறியிருக் கிருர்கள். வட்டார வழக்குகளும், கிளைமொழிகளின் (Dialect) ஆதிக்கமும் தலையெடுத்ததைத் தவிர்த்து விட் டுப் பார்த்தால் சங்காலத் தமிழின் சிறப்பியல்புகள் தெரிய வரும். - - சங்ககாலத் தமிழ்: தொல்காப்பியத் தமிழிற் காணப் படும் சில போக்குகள் சங்க காலத்தில் நன்கு நிலைபெறுகின், றன. சில மாற்றங்களைத் தவிரத் தொல்காப்பியத்தமிழே முழுக்க முழுக்கச் சங்க காலத் தமிழாகும். உயிர் மயக்கங் கள் இடம் பெறும் மரீஇ போன்ற பழைய வடிவங்களுக் குப் பதிலாக மருவி' என்றும் குரீஇ போன்ற பெயர்கள் குருவி என்றும் வருகின்றன. யர்ப்பியல் நோக்கில் உயிர் மயக்கங்களை ஈரசை உடையதாயிருப்பதற்குப் பதில் மூன்று மாத்திரைகளை அல்லது இன்னும் அதிக அளவு