பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலத் தமிழின் சிறப்பியல்புகள் 71 டைய சந்தியக் கரங்களாகின்றன. இவற்றை அளபெடை (உயிரளவு நீட்சியுறல்) என்பர். மாடமறு கின் மருவி மருகுற' பரி 20-25 ) - உயிரிடை வகர யகர உடம்படு மெய்கள் மேன்மேலும் வழக்கு மிகுதியாகின்றன. இதன் விளைவாக உயிர் மயக் கங்கள் தவிர்க்கப்பட்டன. உயிரின் அளவுக்கு வேற்று நிலை வழக்கின்மை அள பெடைகள் நெட்டுயிர்களுடன் கட்டற்ற அல்லது நிபந் தனையற்ற மாற்றில் வருகின்றன. குற்றுயிர்களும் இங்ங் னம் வரலாம் எனப் பிற்கால இலக்கண ஆசிரியர்கள் கொள்கின்றனர். ஆனல் 'கெடுப்பது உம் கெட்டார்க் குச் சார்வாய் மற்ருங்கே எடுப்பது உம் எல்லாம் மழைஎன்பதில் எடுப்பது உம் போன்ற உதாரணம் இதற்குத் தரப்படுகின்றது. இது உண்மையானல் உ+ உ> ஊஉ’ (எடுப்பது + உம்) என்னும் பழைய சமன்பாட்டிற்கே சான் ருகும். - - х யாப்பியல் தேவைகளுக்காகச் சில இடங்களில் குறில் நெடில் உயிர்கள் பரஸ்பரம் இடம் மாறிக் கொள்வதால் அவை கட்டற்ற அல்லது நிபந்தனையற்ற மாற்றத்தில் வரு கின்றனவாம். சான்று ஒடு’ என்பது ஒடு' என்று மாற்றுருவத்தைப் பெறுகின்றது. பழைய நூல்களைப் பதிப்பிப்பவர்கள் உயிர்களுக்குமுன் ஓடு என்பதையும் மெய்களுக்கு முன்னர் "ஒடு" என்பதையும் பொதுவாகக் கொள்கின்றனர். - உயிர் மாற்றம்: எகர அகர மாற்றத்தையும் அதன் விளைவையும் இனிக் கவனிக்கலாம். 'எ'கர உயிர் மொழி யிறுதியில் வருவதில்லை. இடையில் வருவதும் இப்பொழுது நின்றுவிடுகிறது. அங்கு அது அகரமாகிறது. முன்னிலை "என்> அன்' ஆகிறது. அதன் பன்மையான எம், அம். ஆவது தொல்காப்பியர் காலத்திலேயே உண்டு. ஒப்புமை ய்ாக்கத்தால் தன்மைப் பன்மை விகுதி, பல இடங்களில்