பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 х கா. பார்த்தசாரதி கம் என்ருகிறது. இது உ, எ மாற்றம் போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அது அவ்வாறன்று. 'அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும் உம்மொடு வரூஉம் கடதற என்னும் அந்நாற் கிளவியொடு ஆயெண் கிள்வியும் பன்மை உரைக்குந் தன்மைச் சொல்லே' (தொல் 687} “நின்னயத்து வடிவேம் கண்டனம் புல்மிக்கு” (பதிற் 23-11). 'ஆங்கட் செல்கம் எழுகென ஈங்கே’’ - (குறுந் -1-4) ஊ, ஆ. மாற்றமும் அதன் விளைவும்: உயிர் மயக்கங்கள் மறைந்த பின்னர் அருகிய வழக்குடைய ஊகார இறு தியை உடைய செய்யூ" என்னும் இறந்த கால வாய்பாடு "செய்யா என்ருகிறது. ஏனெனில் ஆகாரமே இத்தகைய இடங்களில் மிகுதியும் வரும் உயிராகும். இது பெரிதும் ஒப்புமையாக்கத்தின் விளைவேயன்றி ஒலிமாற்றமன்று. செய்யூஉ செய்யூ" என்பது தழுஉ என்பதோடு ஒப் பிடத்தக்கதாகும். தொடக்கத்தில் இது பெயர்ப் பயனிலை யாக இருந்திருக்கலாம். செய்து' என்பதின் மாற்ருன செய்யூ என்பது செய் உ' என்றும் இருக்கலாம். இங்கு சொல்லாக்க விகுதியான உகரம் துகரத்தின் மாற்ருக இருக்கலாம். கண்டு என்பது செய்து என்னும் வாய் பாடாகும். காணுஉ என்பது செய்யூ என்னும் வாய் பாடாகும். இத்தகைய வேறுபாடுகள் சிலவற்றில் உண்டு. நிறீஇ, செயூஉ, போன்றவை எல்லாம் உயிர் மயக்கத்தில் முடிகின்றன. இறந்தகாலம் காட்டுகின்றன. ஒப்புமை யாக்கத்தால் ஆஅ என்னும் உயிர் மயக்கமும் இறந்த காலம் காட்டத் தொடங்கியிருக்கலாம். - .