பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நா. பார்த்தசாரதி மொழிகளின் தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக நாள டைவில் பிற உயிர்களுடனும் கலந்து மொழிக்கு முதலில் வரலாயிற்று. சான்றுகள் யவனர் (புறம் 56-18) யூபம்- (புறம் 15-21) குற்றியலுகரம்: பேச்சுறுப்புக்களின் ஒட்டு நீங்கும் வகையில் பிறக்கும் உயிர் என்ற நிலையிலிருந்த குற்றியலுக ரம் பின் மேல் இதழ் விரி உயிரானது அடுத்த முக்கியமான மாற்றமாகும். செய்யுளில் குற்றியலுகரத்தைத் தொடர்ந்து மெய்வருவதைப் பற்றித் தொல்காப்பியரும் பேசுகிரு.ர். சான்று: அக்குளுத்துப்புல்லலும் (கவி 94-10) இதன்படி குற்றியலுகரத்தில் முடியும் வேர்களைத் தொடர்ந்து மெய்வரலாம். இங்ங்னம் குறுகிய உகரம் மொழி இறுதிக்கு மட்டுமே உரியதன்று. விக்குள்’ என்ற ஆக்கச் சொல்வில் விக்கு என்பது வேராகும். உள் என் பது தொழிற்பெயர் விகுதியாகும். இங்குள்ள உகரம் குறு கிய உகரமாகும். குறுகிய உகரம் மெய்யால் தொடரப்படு வதை, - - : "குற்றியலுகரமும் முற்றியலுகரமும் ஒற்ருெடு தோன்றி நிற்கவும் பெறுமே". - - (தொல் 1267) என்று அவர் கூறுகிருர். இது இப்படியாயின் இவ்விரு வகையான உசுரங்கட்கும் இடையில் உச்சரிப்பில் ஏதாவது மாற்றமிருக்க வேண்டும். ஒரு குற்றியலுகரம் இன்றுள்ள தைப் போன்ற இதழ் விரிவொலியாகும். மற்ற உகரம் இதழ்குவி உயிராகும், பிற்காலத்தில் மொழியிறுதிக் குற்றியலுகரம் உயிரால் தொடரப்படும் பொழுது ஒரே மாதிரியாக மறைந்துவிடுவது வழக்கம். இவ்வாறு மறை யாத் இடங்கள் சங்க இலக்கியங்களில் உண்டு. தொல்காப் பியர் க்ருத்துப்படி குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில்