பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலத் தமிழின் சிறப்பியல்புகள் 79. மிகுதியும் பயன்படுகிறது. அகரவிகுதியை இவ்வடிவம் பேனிக் காத்துள்ளது. இதில் வகர உடம்படுமெய் இடம் பெற்றுள்ளது முன்னிலையான 'வந்த + அய்' என்பது உடம் படு மெய்யைப் பெற்று வந்தவை' என்ருக வேண்டும். ஆளுல் பரிபாடல் நீங்கலாக ஏனேயவற்றில் இவ்வடிவம் காணப்படவில்லை. 'அட்டவை’ (பரிபாடல் 21-66) கொடியவை (பரிபாடல் 15-56) இதே வாய்பாடுடைய முன்னிலை ஒருமை இந்தப் பரிபாட லுக்கு முந்திய நூல்களிலோ பிந்திய நூல்களிலோ இடம் பெறவில்லை. இதே வடிவம் படர்க்கை அஃறிணைப் பன்மை யிலும் வருவதால் ஏற்படும் ஒரு சொல் பலபொருள்' மயக்கமானது இவ்வடிவத்தை வாழவிடவில்லை. ஏவலில் மரியாதைப் பன்மை என்பது வேர்களுடன் 'உம்' விகுதி யைச் சேர்ப்பதால் காட்டப்படுகிறது. சான்று: வாரும் (பரி 14-9) கொள்ளும் (கலித்தொகை) . . . . . வியங்கோள்: வடிவங்களான வாழிய வாழி என்பதை ‘வாழ்க’ என்பது பெறுகிறது. வியங்கோள் எல்லா இடங்' களுக்கும் எண்களுக்கும் பொதுவாகிறது. அது மரியாதை ஏவலாகவும் ஆகிறது. வாழ்த்து வேண்டுதல், பழித்தல் ஆகிய பொருள்களுக்கு அது வருகிறது. சங்க காலத்திலும் திருக்குறளிலும் எதிர்மறை வியங்கோளுக்கு அல் வருகி. றது. பிற் காலத்தில் இது காணப்படவில்லை. - படர்க்கை-பழைய வடிவங்கள் மறைதல் பலர் பாலுக் குரிய செய்ப' என்பதன் வழக்காறு மிகவும் குறைகிறது. செய்ம்மனர்' என்மார் என்பன மறைகின்றன. செய்யு. மார் முதலான வடிவங்கள் செய்வார் போன்ற வடிவங்க ளுக்கு வழிவிடுகின்றன. அஃறிணையில் வினைமுற்றில்கூட ஒருமையும் பன்மை யும் வேறுபடுத்தப்படுவது குறைகிறது. இதற்கு செய்யும்: