பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 . கா. பார்த்தசாரதி காரண விகுதியாகும். பின்னர் நோக்கப் பொருளைத் தெளிவுபடுத்தக் குகாவிகுதி சேர்க்கப்பட்டிருக்கலாம். செய்பான் + கு- செய்பாற்கு -ஓரின மாதலின் விளைவாக செய்பாக்கு' என்ற வடிவம் கிடைக்கிறது. கலித்தொகை 1113-13) பரிபாடல் (10-9) திருக்குறள் (1029) ஆகியவற் றில் செய்வான்' என்ற வடிவம் வருகிறது. செய்பாக்கு” வடிவம் குறளில் (1.1281 மட்டுமே வருகிறது. இது கிளை மொழி வழக்காக இருக்கக் கூடும். செய்வான்’ மலையாளத் தில் இன்றும் வழக்கில் உள்ளது. ஆனல் தமிழில் இல்லை. *செய்யிய' என்பது நோக்கத்தைக் காட்டும் வினையெச்ச வாய்பாடாகும், இது மறைய செய' என்னும் வாய்பாடு இதனது பணியைப் புறநானூற்றில் செய்கிறது. (புறம்631 செய என்னும் வாய்பாடு இவ்வடிவம் வளர்ச்சியுற் றது. நான் செய வேண்டும் போன்ற வாக்கியங்களில் அது எழுவாயானது. இத்தொடருக்கு இரு எழுவாய்கள் இருக்கலாம். ஒன்று செய என்பதற்கு மற்றது வேண்டும் என்பதற்கு, செய என்பது வேண்டும் என்பது போன்ற சொற்களுடன் ஒன்றுபடுகிறது. வேண்டும் என்பது விருப் பத்தைக்காட்டும் விகுதியாகச் சுருக்கப்படுகிறது. படும், தரும் என்பன இதே போலச் செய என்பதுடன் வரும் பொழுது முறையே தகுதிப் பொருளேயும் தொனிப் பொரு ளையும் உணர்த்துகின்றன. பின்னர் வேண்டும் என்பது மட்டுமே தகுதிப் பொருளே உணர்த்த நின்றது. சான்று: அவன் வரவேண்டும். படு என்பது செயப்பாட்டு வினை விகுதியாக வளர்ச்சியுற்றது. தரும்' என்பது இலக்கிய மொழியில் மட்டுமே காணப்படுகிறது. செயப்பாட்டுவினை செய என்பது முதலில் வினையெச்ச மாகப்படும் என்பதுபோல வினையடையாக, வளர்ச்சியுற்றி ருக்க வேண்டும். சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழி களின் செல்வாக்கால் தமிழில் செயப்பாட்டுவினை வளர்ச்சி யுற்றது. செயவென் வினேயெச்சம் இதற்கு வேராகவே கருதப்படுகிறது. படு என்பது செயப்பாட்டுவினை விகுதி,