பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் பிறமொழிக் கலப்பு பிறமொழிகளோடு தமிழுக்கு ஏற்பட்ட தொடர்பில் மிகவும் பழமையானது தெலுங்கிைேடு ஏற்பட்ட தொடர்பு என்று அறிஞர் தெ. பொ. மீ. கருதுகிருர் சங்க இலக்கியங்களிலேயே திருப்பதிக் குன்றுகளை ஆண்ட குறு நில மன்னர்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. பிற் காலச் சோழப் பேரரசர்கள் தெலுங்கு பேசும் வைதும் பரர்களுடன் திருமண உறவு கொண்டிருந்தனர். இராச ராசசோழனின் மகள் வயிற்றுப் பேரனும் இராசேந்திர சோழனின் மருமகனுமாகிய இராசநரேந்திரன் தெலுங் குக் காப்பியப் புலவர்களில் சிறந்த நன்னயப்பட்டரை ஆதரித்துள்ளான். பதினேராம் நூற்ருண்டின் சோழப் பேரரசனை முதலாம் குலோத்துங்கன் வேங்கிநாட்டு இள வரசனே. அக்கடா முதலிய தெலுங்குச் சொற்கள் கம்ப. ராமாயணத்திலேயே வருவது இந்தத் தொடர்பில்ை என்றே கூறுவர். அருணகிரிநாதரின் பாடல்களில் சுமார் பத்துக்கு மேற்பட்ட தெலுங்குச் சொற்கள் இடம்பெறு கின்றன. கிருஷ்ண தேவராயருக்குத் தமிழ்ப் புலமை உண்டு, மதுரையை ஆண்ட நாயக்கர்கள் தெலுங்கு விஜய நகர வம்சத்தினரேயாவர். - தஞ்சை நாயக்கர்கள் பின் எழுச்சியுற்றனர். தமிழகப் பாளையத் தலைவர்களாகவும் கூடத் தெலுங்கர்கள் வந்து சிறப்பெய்தினர். பின்பு நெல்லைப் பகுதியிலும் தெலுங்கர் குடியேறினர்கள். தெலுங்குக் கலப்பு ஏற்பட்ட வரலாறு இது. இருவேறு மொழித் தொகைகளைப் பழந்தெலுங்கு