பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. கா. பார்த்தசாரதி நேரடிக் கன்னடச் செல்வாக்கையோ, அல்லது தெலுங்கு மூலமான கன்னடச் செல்வாக்கையோ காட்டும். சான்று: கெம்பு--செம்பு மலையாளம்: பழைய தமிழகச் சேர நாடே இன்றைய கேரள நாடு ஆகும். மலையாளமும் தமிழின்மீது செல்வாக் கைச் செலுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் என இன்று அழைக்கப்படும் பகுதி திருவாங்கூர் அரசின் கீழ் நீண்ட காலம் இருந்தது. தமிழும் மலையாள மொழி யும் நெருங்கிய உறவுடையன. எனவே அவற்றை வேறு படுத்தி அறிவது சிக்கலானதாகும். சில சொற்களைப் பார்க்கலாம். 1. சக்கை வறுவல் (ஒர் உணவு) 2. கஞ்சி வள்ளம் (ஓர் உணவு) 3. அவியல் இவற்றைப் போன்ற மலையாளச் சொற்கள் தமிழில் வந்துள்ளன. அங்கணம்' (சாக்கடை) போன்ற மிகப் பழைய தமிழ்ச் சொற்கள் கன்னியாகுமரிப் பகுதியில் இன்னும் வழக்கில் இருக்கின் றன. மராத்தி: மராத்தியர்கள் தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்டகாலம் உண்டு. சிவாஜியின் உறவினரான வெங் காஜி 1766-ம் ஆண்டில் தஞ்சை நாயக்கர்களை வெற்றி கொண்டார். 1800-ம் ஆண்டுவரை சுமார் 14 ஆண்டுகள் தமிழகத்தில் மராத்தியர் ஆட்சி நீடித்தது. பின்பு அவர் கள் பிரிட்டிஷாரின் கீழ்ப் பென்ஷன்தாரர்களாகி விட்ட னர். கடைசி மராத்தி அரசான சரஃபோஜி தஞ்சையில் சரஸ்வதிமகால் நூலகத்தைக் கண்டார். 55 மராத்திச் சொற்கள் தமிழில் வந்துள்ளன. அவற் றில் 23 சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் உள்ளன. 1. பட்டாணி 2. காயம் 3. கச்சாயம் 4. கிச்சடி 5. கேசரி 6. கோசும்பரி 7. சேமியா 8. வாங்கி 9. சொஜ்ஜி கங்காலம், கிண்டி, ஜாடி, சாலிகை, குண் டான், காமாட்டி, ஜம்பம் ஆகிய பலவற்றை மராட்டியி லிருந்து தமிழ்பெற்றது. இவற்றில் சில சொற்கள் சமை