பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் பிறமொழிக் கலப்பு 94 முடிவுரை: இவ்வாறு வரலாற்றில் நம்மொடு தொடர் புடைய இந்திய மொழிகள், அந்நிய மொழிகளின் கலப்பு தமிழில் தவிர்க்க முடியாதவாறு நேர்ந்துள்ளது. சம்ஸ் கிருதத்திலிருந்து சற்சமம் தற்பவமாக ஏராளமான சொற் கள் கலந்திருந்தும் அவற்றை இங்கே கலப்பெனக் குறிப்பி டாததற்குக் காரணம் அவற்றை நம் இலக்கண நூலாசிரிய ராகிய முன்னேரே விதி கூறி ஏற்றமையால் என்க. அது ஞல் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என எண்ணிய வரிசையில் அவை இடம் பெறுகின்றன. ஆயினும் திராவிட மொழியினங்களுள்ளேயே பிறமொழிக் கலப்பைப் பேரளவு தடுத்துக்கொண்டு நிற்கும் ஆற்றல் தமிழ் மொழிக்குத்தான் இருந்தது என அறிய முடிகிறது. வரலாற்று ரீதியாகத் தவிர்க்க முடியாத சிறிதளவு கலப்பை மட்டுமே தமிழ் ஏற்றிருப்பதை அறிய முடி கிறது. - * - வரலாறு, கலாசாரம் ஆகியவற்ருல் கலப்பு ஏற்படும் போது மொழிக்கலப்பும் சிறிதளவு தவிர்க்க முடியாததாக நேர்ந்துவிடுகிறது என்பதைத்தான் இந்தக் கலப்புக்கள் காட்டுகின்றனவே ஒழிய தமிழ் மொழியின் சிறப்பையோ, உயர் தனிச் செம்மையையோ இவை ஒரு சிறிதும் குறைத் துக் காட்டவில்லை. நவீன விஞ்ஞான-வியாபாரப் பாதிப் புக்களால் ஆங்கில மொழியோடு இந்தக் கலப்பு அதிகரித் துள்ளது எனினும் தமிழ் மொழியின் தனித்தியங்கும் தன் மையை எந்தக் கலப்பும் பாதித்துவிடாது என்பது உறுதி.