பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விறலி விடு தூது தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகை களில் சிறு பிரபந்தங்கள் முக்கியமானவையும் முதன்மை யானவையும் ஆகும் என்று கூறத்தக்கவை. முன்னேர் இத் தகைய சிறு பிரபந்தங்களைத் தொண்ணுாற்ருறு வகையா கப் பிரித்துள்ளார்கள். அதனல் தொண்ணுற்ருறு வகைச் சிறு பிரபந்தங்கள் என்றே அவற்றுக்கு ஒரு பெயரும் ஏற் பட்டுவிட்டது. சிற்றிலக்கியங்கள் என்பது மற்ருெரு பெயர். - -- நம்முடைய சிறு பிரபந்த வகைகளில் துர து, உலா, இரண்டும் புகழ் பெற்ற்வை. தமிழில் தூது நூல்களும் உலா நூல்களும் எண்ணிக்கையில் அதிகம். தமிழில் துாது எனப்படும் இதே வகை நூல்களைச் சமஸ்கிருதத்தில் சந் தேசம்’ என்பர். காளிதாஸன் இயற்றிய மேக சந்தேசம் என்னும் "முகில் விடு தூது' பற்றி யாவரும் அறிவர். புகழ்பெற்ற இலக்கியமாகும் அது. ஒருவர் தாம் நேசிக்கும் தலைவர்கள், தெய்வங்கள், வள்ளல்கள் போன்ருே.ரிடம் பாணன், விறலி, போன்ற உயர் திணைத் துரதுவர்களையும் கிளி, வண்டு, தென்றல், மேகம் போன்ற அஃறிணைத் துாதுக்களையும் அனுப்புகிற வழக்கம் இருந்ததென்று இது வரையில் வெளிவந்துள்ள இவ்வகைப்பிரபந்தங்களிலிருந்து அறிய முடிகிறது. மனத்தையே தூதாக அனுப்புவதும் உண்டு. 'நெஞ்சுவிடு தூது’ என்ற பெயரிலேயே பல பிர பந்தங்கள் உள்ளன. இன்னும் பணவிடு தூது 'புகை யிலைவிடு தூது’ போன்ற அபூர்வமான பல துTதுகளும் தமி