பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

விநாயகரை வணங்கும்போது இரண்டு கைகளாலும் நெற்றியில் மும்முறைகுட்டி, வலக்காதை. இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.

அபிடேகம், நிவேதனம் ஆகியவை நிகழும்போது தரிசனம் செய்தல் ஆகாது.

தரிசனம் முடிந்தவுடன் சண்டேசுவரர் சந்நிதியை அடைந்து வணங்கி மூன்று முறை கைகொட்டி சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டு வேண்டுதல் வேண்டும்.

சண்டேசுவரர் வழிபாடு நிறைவு பெற்றவுடன் சிவ சந்நிதானத்தை அடைந்து வணங்கிப் பின் ஓரிடத்தில் அமைதியாக இருந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை இயன்றவரை உச்சரிததல் வேண்டும். பின்னரே எழுந்து இல்லத்திற்குச் செல்லுதல் வேண்டும்.

பிரதோஷம்

என்றும் சாவாதிருக்க அமிழ்தம் பெறவிரும்பிய தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியென்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது ஆலாலம் என்னும் நஞ்சு தோன்றியது. அப்பொழுது திருமால் முதலிய எல்லோரும் அந்நஞ்சின் வெம்மையைத் தாங்க முடியாமல் சிலபெருமானைச் சரணடைந்தனர். கருணையே வடிவாகிய சிவபெருமான் தேவர்கள் வேண்டுகோட்கிணங்கி அந்நஞ்சினைத் தமது கண்டத்தில் அடக்கி மன்னுயிர்களை உய்வித்தருளினார். இவ்வாறு ஆலகால நஞ்சினைத் தன் கண்டத்தில் அடக்கியது ஏகாதசி மாலை நேரமாகும். மறு நாள் திரயோதசி, பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற தேவர்கள் தம்மைக் காத்தருளிய சிவபெருமானை முதல்நாளே வணங்காத தம்பிழையை யெண்ணிச் சிவபெருமானைப் பணிந்து தம் பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டினர். சிவ பெருமான் அன்று மாலை (4½ மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வேளையில் தம் திருமுன் உள்ள இடபதேவரின் இரு