பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருச்சிற்றம்பலம்
பதிப்புரை

சிவகாமியம்மை காணத் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் திருக்கூத்தினை நிகழ்த்தியருளும் நடராசப்பெருமான் திருக்கோயில் திருப்பணி இனிது நிறைவேறி மகா கும்பாபிஷேகம் நிகழும் போது தில்லைப் பெருங்கோயிலின் வரலாறு கல்வெட்டுச் சான்றுகளோடும் இலக்கியச் சான்றுகளோடும் எழுதப் பெற்று வெளிவருதல் வேண்டும் என்பது எங்களது விருப்பம். எங்களது வேண்டுகோட்கிசைந்து 'தில்லைப் பெருங்கோயில் வரலாறு' என்னும் இந்நூலை எழுதியுதவியவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் திருமுறை ஆராய்ச்சிக்கலைஞர் கலைமாமணி பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் ஆவார். அவர்கட்கு உதவியாயிருந்தவர் பச்சையப்பன் பள்ளி முன்னாள் தமிழாசிரியர் புலவர் திரு வீரநாராயணன் ஆவர். உடனிருந்து உதவியவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவர் டாக்டர் எம். எஸ். கோவிந்தசாமி அவர்களாவர். விரைவில் வனப்புற அச்சிட்டுக் கொடுத்தோர் அண்ணாமலை நகர் சிவகாமி அச்சகத்தார். இவர்கள் எல்லோர்க்கும் என பாராட்டும் நன்றியும் என்றும் உரிய்வாகும்.

இங்ஙனம்

9. கனகசபைநகர்
சிதம்பரம் -608001
10-02-1987

G. வாகீசம்பிள்ளை
தலைவர்
தில்லைத் தமிழ் மன்றம்