பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

வரது திருவுருவத்தோற்றத்தையும், மேற் பக்கமாகக்கிழக்கு நோக்கியமைந்த சந்நிதியில் அறிதுயிலமர்ந்தருளிய கோவிந்த ராசப்பெருமாள் திருவுருவத்தையும் ஒருங்கே கண்டு வழிபடலாம். கி. பி 726 முதல் கி.பி. 775வரை ஆட்சிபுரிந்த நந்திவர்மப் பல்லவன் என்பவனால்தில்லைப்பெருங் கோயிலில் பிரதிட்டை செய்யப் பெற்ற பெருமாள் சந்நிதி தில்லைத் திருச் சித்திர கூடம் என்பதாகும். இது திருமங்கையாழ்வாராலும் குல சேகராழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாகும். தில்லை மூவாயிரவராகிய அந்தணர்களே இது திருச் சித்திர கூடப் பெருமாளையும் முற்காலத்தில் பூசனை செய்து வந்தனர். இச்செய்தி,

மூவாயிரநான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காயசோதி
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்று சேர் மின்களே.

(பெரிய திருமொழி 3-2,3)

எனத் திருமங்கை ஆழ்வாரும்,

'செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வமமான் றானே”

(பெருமாள் திருமொழி 10-2)

எனக் குலசேகர ஆழ்வாரும் பாடிப் போற்றிய பனுவல்களால் புலனாகின்றது. குலசேகராழ்வார் அருளிய, அங்கணெடு மதில், எனத்தொடங்கும் பதிகம் இராமாயண நிகழ்ச்சியைத்தொகுத்துக் கூறும் சிறப்புடையதாகும்.

இங்ஙனம் ஓரிடத்தில் நின்றே சிவபெருமான் திருமாலாகிய இருபெருந் தெய்வங்களையும் ஒரு சேர வழிபடும் நிலையில் அமைந்துள்ள தெய்வத்தலம் தில்லைப்பெருங்கோயிலாகிய