பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

ஒரு வருஷ காலத்திற்குமுன் ஒரு மாதகாலம் ரஜா எடுத்துக்கொண்டு தமது சொந்த ஊராகிய மைசூருக்குப் போயிருந்தார். அப்போது அந்த சமயற்காரனும் அவருடன் கூட மைசூருக்குப் போயிருந்தான். அவ்விடத்தில் அந்த சமயற்காரனுக்கு மைசூர் மகாராஜனுடைய அரண்மனையிலிருந்த ஒரு சமயற்காரனது சிநேகம் உண்டாயிற்று. அந்த அரண்மனைச் சமயற்காரன் புதிய புதிய மிட்டாய் தினுசுகள் செய்வதில் நல்ல தேர்ச்சி பெற்ற மகா நிபுணன்.

இப்பொழுது இந்தியா தேசமெங்கும் பிரபலமடைந்து, எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் மைசூர் பாகு என்ற மிட்டாயியை அந்த சமயற்காரன்தான் புதியதாய்க் கண்டுபிடித்து, அப்போது மைசூர் மகாராஜனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அதைக் கொடுத்து, அவர்களிடம் தங்கத்தோடுப் பரிசும் சர்வ மானியமும் பெற்று மிகுந்த கீர்த்தியோடு விளங்கிக் கொண்டிருந் தான். அவனுடைய சிநேகத்தையும் பிரியத்தையும் எப்படியோ சம்பாதித்துக் கொண்ட நமது பூலோக விந்தை சமயற்காரன் மைசூர்பாகு என்ற புதிய மிட்டாயி செய்யும் முறையை அவனிடமிருந்து கற்றுக்கொண்டு வந்து, அதைப் பல தடவைகளில் செய்து தனது எஜமானரான தாசில்தாருக்குக் கொடுத்து, அவரால் அபாரமாக மெய்ச்சப்பட்டிருந்தான். அந்த நினைவு அவனுக்கு உண்டாயிற்று.

தான் வழியில் கண்டெடுத்த ஒரு ரூபாய் மறுநாள் வரையில் வீணில் தன்னிடம் தூங்கிக்கொண்டிருக்கும். ஆதலால், தான் அதன் சொந்தக்காரரைக் கண்டுபிடித்து அவரிடம் கொடுக்கிற வரையில், அதை அவரிடமிருந்து தான் வட்டிக்கடனாய் வாங்கினது போல பாவித்து உபயோகித்துக்கொள்வது தவறல்ல என்ற எண்ணம் உண்டாயிற்று. தான் உடனே கடைக்குப் போய் சர்க்கரை, கடலைமாவு, நெய் பிறகு, மண்பாத்திரங்கள் முதலியவற்றை வாங்கிக் கொணர்ந்தால், அரை நாழிகை சாவகாசத்தில், தான் மைசூர்பாகு தயாரிக்கலாம் என்றும், அதைத் தான் எடுத்துக் கொண்டுபோய் அதிக ஜன நடமாட்டமுள்ள கடைத்தெருவில் அதை வைத்துக்கொண்டு விற்றால், அது புதிய தினுசு மிட்டாய். ஆதலால், ஜனங்கள் ஆசையோடு அதை உடனே வாங்கிவிடுவார்கள் என்றும், அதனால் தனக்கு சுமார் மூன்று ரூபாயாவது

24