பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திவான் லொடபட சிங் பகதூர்

11 - மணிக்குமேல் அவர் கச்சேரி செய்யும் போது கொடுக்க வேண்டுமாம். அப்படிக் கொடுத்தால் அவர் சட்டப்படி விசாரித்து, நீதி செலுத்தவதாகச் சொல்லுகிறார் என்றான்.

அதைக் கேட்ட நமது சமயற்காரன் விசனத்தினாலும் ஏமாற்றத் தினாலும் அப்படியே குன்றி உட்கார்ந்துபோய், "ஆகா என்ன மனித ஜன்மம்! என்ன நீதி இது நாளைய தினம் 11-மணி வரையில் நானும் என் குடும்பத்தாரும் பிழைத்திருந்தால் அல்லவா? அதற்குமேல் இவரிடம் பிராது கொடுக்க நான் வர முடியும்; சட்டம் இப்படியும் இருக்குமா? மனிதர்கள் ஏழ்மைத் தனம், இல்லாமை பசி, தாகம் முதலிய துன்பங்களுக்கு இலக் கானவர்கள் என்பதை சட்டம் இலட்சியமே செய்கிறதில்லை போலிருக்கிறதே. அவர்களை கேவலம் உயிரற்ற ஒரு யந்திரம் என்றே சட்டம் மதிக்கிறது போலிருக்கிறதே. ஆனாலும், சட்டத்தை அநுபவத்தில் பிரயோகிக்கும் மனிதர்கள் கூடவா கொஞ்சமும் ஜீவகாருண்யம் இல்லாமல் இருக்கவேண்டும்!” என்று வாய் விட்டுக் கூற, அதைக் கேட்ட சேவகன் 'அப்பா நான் என்ன செய்வேன். இந்த திவான் மகா கண்டிப்பான மனிதர். யாராவது தாம் ஏழை என்று இவரிடம் சொல்லிக் கொண்டால், அதை இவர் உண்மை என்று உடனே ஏற்றுக் கொள்ளுகிறதே இல்லை. ஏனென்றால், சிலர் சுலபமாகப் பணம் சம்பாதித்துப் பிழைப்பதற்கு அதை ஒரு தந்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அதனால் அவர்கள் சோம்பேரிகளாய் மாறி மற்ற மனிதருக்கு ஒரு பாரமாக இருந்து வருகிறார்கள் என்றும் எண்ணி, உண்மை யிலேயே பட்டினி கிடந்து இறப்பவர்களாக இருந்தாலும், அதையும் இலட்சியம் செய்கிறதில்லை. ஆகையால், இவரிடம் இப்போது காரியம் பலிதமாகாது. உன்னுடைய பரிதாபகரமான நிலைமையைக் கேட்டறிந்தது முதல், என் குடல் கலங்கிப்போய் மனம் தவிக்கிறது. என் கைவசத்தில் இப்போது எட்டனா பணம் இருக்கிறது. இதை நான் தருகிறேன். நீ கொண்டுபோய் உன் குழந்தைகளுக்குச் சாப்பாடு செய்துவை' என்று நிரம்புவும் அநுதாபத்தோடு கூறித் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தான். அந்த எளிய சேவகனது பெரும் போக்கான புத்தியையும் தயாள குணத்தையும் கண்டு, மிகுந்த வியப்பும் களிப்பும் அடைந்த சமயற்காரன், "ஆகா இந்த ராஜ்ஜியத்தில்

31