பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திவான் லொடபட சிங் பகதூர்

இம்மாதிரி அக்கிரமம் நடக்காமல் தடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களையும் மிஞ்சிக் குற்றம் செய்யாத ஒரு நிரபராதி அக்கிரமமாக தண்டனை அடைவதைக் காட்டிலும், குற்றம் செய்த நூறு மனிதர்கள் விடுதலை அடைவது உசிதமான விஷயம் என்பது சட்ட சம்மதமான கொள்கை, நீர் கொண்டுவந்திருப்பது உண்மையான பிராதுதான் என்பதை நான் இப்போது நிச்சயமாகக் கண்டு பிடிக்க ஏதுவில்லை. ஆகையால், உண்மையில் குற்றம் செய்த அந்த இருபது மனிதரும் தப்பிப் போவது ஒரு பொருட் டல்ல. இன்று நான் உமக்கு இடம் கொடுத்து உம்முடைய பேச்சையே வேதவாக்கியமாக எடுத்துக்கொண்டால், நாளைக்கு, இதை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு மனிதர், எவ்வித குற்றமும் செய்யாத இன்னொருவர்மீது பிராது கொடுப்பார்; சாட்சியம் இல்லையென்பார். அந்த வழக்கில் நான் அந்த நிரபராதியைத் தண்டிக்க நேருமல்லவா. ஆகையால் நீர் போய் தக்க சாட்சிகள் அழைத்துக்கொண்டு வரவேண்டும், அதுவுமன்றி, குற்றம் செய்த வர்கள் இன்னின்னார் என்ற தகவல்களையும் அறிந்துகொண்டு வரவேண்டும். ஆகையால் நான் உம்முடைய பிராதைத் தள்ளி விட்டேன். நீர் போகலாம் என்று கூறி வேறொரு வழக்கை எடுத்துக்கொண்டார். அவரது தீர்மானத்தைக் கேட்டு அளவற்ற ஏமாற்றமும், துயரமும், பதைபதைப்பும் கொண்ட நமது சமயற் காரன் அதற்கு மேல் தான் அவ்விடத்தில் நிற்பதிலும் அந்த திவானிடம் மறுபடி தனது வேண்டுகோளை வற்புறுத்திக் கூறுவதிலும் தனக்கு எவ்வித அநுகூலமும் உண்டாகாதென்று உணர்ந்து அவ்விடத்தை விட்டு வெளியிற் சென்றான். சென்றவன் தான் அதற்குமேல் எங்கே போவது, என்ன செய்வது, தன்னுடைய பெண்டு பிள்ளைகளின் துன்பத்தை எவ்விதம் களைவது என்பதை அறியாதவனாய்த் தயங்கிக் கலங்கி வாடித் துவண்டு வெகு நேரம் வரையில் நின்றபின், அவ்விடத்தை விட்டு, எவ்வித நோக்கமின்றி பைத்தியங் கொண்டவன்போல தெருவோடு செல்லத் தொடங்கினான். அவன் அவ்வாறு இரண்டொரு தெருக்களின் வழியாகச் சென்ற காலத்தில் அந்த ஊர் மகாராஜனது அரண்மனை அவ்விடத்தில் எதிர்ப்பட்டது. அதை அவன் பார்க்கவே அவனது மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது. தனது விஷயத்தில் சில மனிதர்கள்

35