பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

திறந்து மூடுவதையும் விடாமல் செய்து கொண்டே இருந்தார். அவர் எத்தனை இலாகாக்களையும் ஆள் மாகாணங்களையும் எவ்விடத்தில் வைத்திருந்தார் என்பதும், எப்படி அவர்களை நிர்வகித்தார் என்பதும், அவர்களால் மாதம் ஒவ்வொன்றும் இலக்ஷம் இலக்ஷமாக வசூலிக்கப்பட்ட பணத்தை என்ன செய்தார் என்பதும் எவருக்கும் தெரியாதபடி அவர் நிரம்பவும் இரகஸியமாகவும் தந்திரமாகவும் சகலமான காரியங்களையும் நடத்தி வந்தார். அவ்வாறு பத்து வருஷ காலம் கழிந்தது. உண்மை யிலேயே மகா மேதாவியான அந்த ஊர்த் திவான் தமது பகிரங்க இராஜாங்கத்திற்குள் இன்னொரு பெரிய இரகஸிய ராஜாங்கம் அந்த ஊரில் இருந்து நடந்தேறி வந்ததையும், அதன் உத்தியோ கஸ்தர்கள் தம்மிடத்தில்கூட வரி வசூல் செய்து வந்தார்கள் என் பதைப் பற்றியும் சொப்பனத்தில்கூட நினைக்காமல் இருந்து வந்தார். அந்த தேசத்து மகராஜன் அரண்மனைக்குள்ளேயே எப் போதும் அடைப்பட்டிருப்பதைப்பற்றி, ஒரு வாரத்திற்கு ஒரு முறையாகிலும் மாலை வேளையில் அரண்மனையை விட்டு வெளிப்பட்டு ஏதாகிலும் ஒரு திக்கில் நாலைந்து மயில் தூரம் நடந்துபோய் தேகத்திற்கு உழைப்புக் கொடுத்துத் திரும்பி வருவதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார். அவ்வாறு அவர் போய் வருகையில் மகாராஜன் என்பதை எவரும் கண்டு கொள்ளக் கூடாதென்ற எண்ணத்தினால், அந்தச் சமயத்தில் தம்முடைய சம்கி உடைகளை எல்லாம் அணியாமல் ஓர் ஏழை மனிதர்போல சாதாரண உடைகள் தரித்துக்கொண்டு வெளியில் போய் உலாவி கிராம வாசிகளோடு பேசிவிட்டுத் திரும்பி வருவது வழக்கம். அம்மாதிரி அவர் ஒரு நாள் மாலை வேளையில் தமது உடைகளை மாற்றிக்கொண்டு அரண்மனையை விட்டு வெளிப் பட்டு வயல்கள், தோட்டங்கள், காடுகள் முதலியவற்றிலுள்ள வேடிக்கைகளைப் பார்த்துக்கொண்டே வெகுதுரம் போய்த் திரும்பி வந்தார். வந்தவர் அவ்வூர்ச் சுடுகாட்டிற்குள் சமீபமாக இருந்த ஒரு பாதையை அடைந்தார். அவ்விடத்தில் ஒரு சுங்கன் சாவடி கட்டப்பட்டிருந்தது. அதில் இரண்டு சேவகர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்தில் இரசீதுப் புஸ்தகங்கள் காணப்பட்டன. அது அந்த ஊருக்குள் வரும் வண்டிகளுக்கு சுங்கம்

தி.லொ.சி.-4

49