பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

பிணத்தை விட்டு, பிறகு துன்பத்தில் மாட்டிக்கொள்ள இஷ்டமில்லை. நீர் இப்போது சொல்லுகிறபடி திவானிடம் போய் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லுவீர் என்பதை நாங்கள் எப்படி நிச்சயமாக நம்புகிறது? இவர்களுக்கு நாங்கள் அநுமதி கொடுத்த பிறகு நீர் உம்முடைய பாட்டில் உம்முடைய வீட்டுக்குப் போய் விட்டால், நாங்கள் என்ன செய்கிறது? அதெல்லாம் பலியாது. நீர் உம்முடைய பாட்டைப் பார்த்துக்கொண்டு போம். நீர் மகா ராஜனுடைய சொந்தக்காரரா இருந்தாலும் சரி, அல்லது, மகாராஜனாகவே இருந்தாலும் சரி, உம்முடைய பேச்சை ஆதாரமாக வைத்துக்கொண்டு சர்க்கார் உத்தரவை மீறி நடக்க எங்களுக்கு இஷ்டமில்லை. உமக்கு அவ்வளவு அக்கரை இருந்தால் நீரே அந்த ஒரு பணத்தைக் கொடுத்துவிட்டு பிறகு அதை அரண்மனை கஜானாவிலிருந்து வசூலித்துக்கொள்ளும். அல்லது, உம்மிடம் இப்போது பணம் இல்லையானால் இவர்கள் இவ்விடத்திலேயே பிணத்தை வைத்துக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, உடனே நீர் ஊருக்குள் போய் திவானுடைய உத்தரவையோ, அல்லது, வரிப்பணத்தையோ கொண்டுவந்து சேரும். அதுதான் ஒழுங்கான காரியம். எங்களுக்கு அதனால் பாதகம் ஏற்படாது" என்றான்.

அதைக்கேட்ட மகாராஜன் அந்தச் சேவகர்களின் கண்டிப்பையும் ஒழுங்குதவறாத மனப்பான்மையையும் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தமது தேசத்தில் அத்தகைய அக்கிரமமான வரி ஏற்படுத்தப்பட்டிருந்த விஷயம் அவரது மனத்தை ஒரு புறத்தில் வதைத்ததானாலும், கீழ்ச்சிப்பந்திகள் அவ்வளவு திறமையாகவும் நிலை தவறாமலும் நடந்து கொண்டதைப்பற்றி இன்னொரு புறத்தில் பெருமகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாயிற்று. மகாராஜன் உடனே தமது சட்டைப்பையிலிருந்து ஒரு பணத்தை எடுத்து "நீங்கள் சொல்வது நியாயமான விஷயம். வரிப்பணத்தை நானே செலுத்துகிறேன். வாங்கிக்கொண்டு ரசீது கொடுங்கள். அதில் ஒர் அநாதைப் பிணத்திற்காக ஒரு தருமவானால் செலுத்தப்பட்ட வரிப்பணம் ஒன்று என்று எழுதிக்கொடுங்கள்" என்று கூறிப் பணத்தைக் கொடுத்தார்.

சேவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவ்விதமே இரசீது எழுதிக் கொடுத்தார்கள். அதன் அடியில் யார் கையெழுத்திட்

54