பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

மயில் நீள அகலம் பரவிய கெட்டியான கட்டிடமாக இருந்தது. அதன் உள்பக்கம் முழுதும் சிறிய சிறிய மண்டபங்களாகப் பிரித்துக் கட்டப்பட்டிருந்தது. அத்தகைய மண்டபங்கள் நூற்றுக்கணக்கில் காணப்பட்டன. ஒவ்வொரு மண்டபத்தின் முன்புறத்திலும் "குடி தண்ணிர் இலாகா" "தொழில் வரி இலாகா” “உத்தியோக வரி இலாகா" "பிண வரி இலாகா" "திவான் லொடபட சிங் முததிரை வரி இலாகா" என்ற விலாசங்கள் எழுதப்பட்டிருந்தன. அங்கே காணப்பட்ட மண்டபங்களில் அவ்வாறு நூற்றுக்கணக்கான வெவ்வேறு இலாகாக்கள் இருந்தன; ஒவ்வொரு மண்டபத்திலும் சுமார் இருநூறு குமாஸ்தாக்களும், அவர்களுக்குத் தலைவர் ஒருவரும் காணப்பட்டனர். எல்லா மண்டபங்களுக்கும் இடையில் நடுநாயகம் போல விளங்கிய பிரம்மாண்டமான ஒரு பெரிய மகாலில் திண்டு திவாசுகள் நிறைந்த உன்னதமான ஆசனத்தின் மீது ரெவினியூ தாசில்தார் ஆடம்பரமாக அமர்ந்திருந்தார். அவருக்கருகில் கை கட்டி வாய் புதைத்து எண்ணிக்கையற்ற குமாஸ்தாக்களும், சேவகர்களும் வணக்கமாக நின்று கொண்டிருந்தனர். அவருடைய ஆசனத்திற்கு மேல் காணப்பட்ட, முத்துக் குஞ்சங்கள் நிறைந்த பங்காவைப் பல சேவகர்கள் இழுத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் விசிறி, வெண்சாமரை முதலியவற்றை வைத்து வீசிக்கொண்டிருந்தனர்.

மகாராஜனும், திவானும், மற்றவர்களும் அந்த இடத்தை அடையவே அவர்கள் இன்னார் என்பதை அறிந்துகொண்ட தாசில்தார் முதலிய எல்லோரும் குபிரென்று எழுந்து நிரம்பவும் பணிவாகக் குனிந்து மகாராஜன் முதலியோருக்கு நமஸ்காரம் செய்து கைகட்டி மரியாதையாக நின்றனர். தாம் அந்த சமஸ் தானத்திற்கு வந்தபின் ஒரு நாளாகிலும் அந்த இடத்திற்கு வந்தே அறியாத திவான் பெரு வியப்பும் பிரமிப்பும் அடைந்து சொப்பனத்தில் நடப்பவர்போல் மாறிப்போனார். தாம் அதற்கு முன் இருந்த கவர்னர் ஜெனரலுடைய கச்சேரி கூட அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்ததாக அவருக்குத் தோன்றவில்லை. அந்தத் தாசில்தாரின் கச்சேரிக்கு முன், கவர்னர் ஜெனரலுடைய கச்சேரி, மவுண்டு ரோட்டிலுள்ள பெரிய வெள்ளைக்காரர்களின் கம்பெனிக்கு அருகில் காணப்படும் மொச்சைக் கொட்டைச்

62