பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

என்றும், நான் விண்ணப்பம் எழுதிக்கொடுத்தால், தான் அதைக் கொண்டுபோய் திவானிடம் கொடுப்பதாகவும் சொன்னார். நான் உடனே விண்ணப்பம் எழுதிக்கொடுத்தேன். அதற்கு சில தினங் களுக்குப் பிறகு தபால் மூலமாக எனக்கு நியமன உத்தரவு வந்தது. அது முதல் நான் இந்த இடத்தில் இருந்து வேலை பார்த்து வருகிறேன்.

திவான்: அந்த உத்தரவைக் காட்டமுடியுமா?

தாசில்தார்: (தமது மேஜைக்குள்ளிருந்த உத்தரவைத் தேடி எடுத்துக்கொடுத்து) இதோ இருக்கிறது பாருங்கள் - என்றார்.

அந்த நியமன உத்தரவை திவான் வாங்கிப் பார்க்க, அதில் தமது கையெழுத்தைப்போலவே ஒரு கையெழுத்து காணப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர் என்ற முத்திரையும் வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்த திவான் திடுக்கிட்டு நடுநடுங்கிப் பிரமித்து அதை அரசனிடம் கொடுக்க, அவன் அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு வாய்பேசா ஊமைபோல் நின்றுவிட்டான்.

திவான்: (மறுபடியும் தாசில்தாரைப் பார்த்து) ஐயா! தாசில்தார் வேலைக்கு விண்ணப்பம் எழுதிக் கொடுக்கும்படி உம்மிடம் சொன்ன சேவகனுடைய அடையாளம் உமக்கு இப்போது தெரியுமா?

தாசில்தார்: அதன் பிறகு இப்போது பத்துவருஷ காலம் ஆய்விட்டது. எத்தனையோ ஜெவான்கள் வருகிறார்கள், போகிறார்கள். எல்லோரும் ஒரேவிதமான உடைகள் அணிந்திருக்கிறார்கள். ஆகையால் அவர் இன்னார் என்று நான் இப்போது கண்டு பிடிப்பது சாத்தியமில்லை.

திவான்: இத்தனை இலாகாக்களும் நீர் வந்த போதே இருந்தனவா? .

தாசில்தார்: இல்லை; நான் வந்த போது நாலைந்து இலாகாக்கள்தான் இருந்தன. இந்தக் கட்டிடமும் சிறியதாக இருந்தது. நான் வந்து வேலை ஒப்புக்கொண்ட பிறகு அடிக்கடி திவான் சாயப்பினிடத்திலிருந்து தபாலில் எனக்கு உத்தரவு வரும். இன்னின்ன புதிய வரிகள் ஏற்படுத்தி இருப்பதாகவும், அதற்கு

64