பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திவான் லொடபட சிங் பகதுர்

வேண்டிய கட்டிடங்களைக் கட்டி சிப்பந்திகளை நியமித்து அதை நடத்தும்படி அந்த உத்தரவில் விவரமான விதிகளும் விவரிப்பு களும் இருக்கும். அதன்படி நான் நிறைவேற்றி வைப்பேன். அம் மாதிரி இந்தப் பத்து வருஷகாலத்தில் 175 இலாகாக்கள் என்னால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.

திவான்: எல்லா இலாகாக்களிலும் மொத்தத்தில் எத்தனை சிப்பந்திகள் இருக்கிறார்கள்.

தாசில்தார்: 3748 சிப்பந்திகள் இருக்கிறார்கள். திவான்: இந்த நிர்வாகத்தில், மொத்தத்தில் வருஷ வருமானம், செலவு, ஆதாயம் எவ்வளவு என்று சொல்லமுடியுமா? தாசில்தார்: ஒ சொல்லமுடியும். வசூலாகும் ஒவ்வொரு பைசாவுக்கும், செலவாகும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கண்ணாடிபோல ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கிறது. வருஷத் திற்கு வருஷம் வருமானமும், செலவும், மிச்சமும் பெருகிக் கொண்டே போகின்றன. நான் வந்த முதல் வருஷத்தில் வருமானம் முக்கால் லக்ஷம் ரூபாய். செலவு எண்ணாயிரம் ரூபாய்; செலவு போக பாக்கி மிச்சம். போன வருஷத்தில் மொத்த வருமானம் முப்பத்தைந்து லக்ஷம். செலவு ஒரு லக்ஷம். செலவு போக பாக்கி மிச்சம்.

திவான்: வசூலாகும் பணத்தையெல்லாம். நீங்கள் எங்கே வைக்கிறது? ஆள் மாகாணங்களின் செலவை யார் செய்கிறது? மிச்சப்பணத்தை என்ன செய்கிறது?

தாசில்தார்: இதோ எனக்குப் பக்கத்தில் ஒருகஜானா இருக்கிறது. ஒவ்வொரு இலாகாவிலும் அன்றன்று வசூலாகும் வருமானம் மாலைக்குள் இந்த கஜானாவுக்கு வந்து சேர்ந்துவிடும். சிப்பந்திகளின் சம்பளம், என்னுடைய சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் இவ்விடத்தில் என்னுடைய அநுமதியின்மேல் கொடுக்கப் படும். மிச்சப்படும் தொகை வருஷ மெல்லாம் இங்கேயே இருக்கும். ஒவ்வொரு வருஷ முடிவிலும், மிச்சப்படும் தொகையை திவான் சாயப்னுடைய சேவகர்கள் வந்து பாராவோடு எடுத்துக் கொண்டு போவார்கள். அந்தத் தொகையை திவான் சாயப்

திலொ.சி.-5

65