பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திவான் லொடபட சிங் பகதூர்

கோடி கோடியாய் எல்லா ஜனங்களும் அறியக் கொள்ளையடிக்கிறார்கள்; ஆனால் எல்லா வரவு செலவு ஆதாயங்களுக்கும் ஓர் இம்மியளவும் பிசகாமல் கணக்கு வைத்திருக்கிறார்கள்; எல்லாவற்றிற்கும் தாக்கீதுகளும் சட்ட ஆதாரமும் காட்டுகிறார்கள். இவ் விதமான இந்திரஜாலக் கொள்ளை இந்த உலகத்தில் வேறே எந்த தேசத்திலும் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய எதிலும் நடக்கத் தகுந்ததேயல்ல. ஆனால் இன்னார்தான் இதற்கு உத்தரவாதி என்பது இன்னம் தெரியவில்லை. தக்க சாட்சிகளைக் கொண்டு மெய்ப்பிக்காமல், எவர் மீதும் எந்தக் குற்றத்தையும் சுமத்துவது சட்ட விரோதமாகையால், தாசில்தார் முதலிய சிப்பந்திகள் எல்லோரையும் நாம் விடுதலை செய்திருக்கிறோம். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட வரிகளையெல்லாம் இன்று முதல் நீக்கிவிட்டோம். இவர்களுடைய சச்சேரிக் கட்டடத்தையும் அதற் குள்ளிருக்கும் பொருள்களையும் சர்க்காருக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறோம். இது சம்பந்தமாக இந்த திவானினால் பிறப்பிக் கப்பட்டுள்ள சகலமான தஸ்தாவேஜுகளும், ரசீதுகளும் உண்மையிலேயே இவரால்தான் அனுப்பப்பட்டவை என்பதற்குப் போதுமான சாட்சியம் இல்லை. அதுவுமன்றி இந்தப் பத்து வருஷகாலமாக இவருடைய நடத்தையையும் நாணயத்தையும் நாம் ரகசியத்தில் கவனித்து வந்ததில், இவர் இத்தகைய பிரம் மாண்டமான கொள்ளையில் இறங்கி இருப்பாரென்று நினைப்ப தற்கு என் மனம் சம்மதிக்கவில்லை. ஆயினும், இந்த சமஸ் தானத்தின் சர்வ அதிகாரத்தையும் நான் இவரை நம்பி இவரிடம் ஒப்புவித்திருக்கையில் இவருடைய கண்ணிற்கெதிரில் இப்படிப் பட்ட அபாரமான பகல் கொள்ளை நடப்பதை இவர் கண்டு பிடிக்காமல் அஜாக்கிரதையாக இருந்தது இவர்மீது பெருத்த குற்றமாகிறது. இதனால் பொது ஜனங்கள் கோடிக்கணக்கில் பொருள் நஷ்டத்திற்கும் இதர துன்பங்களுக்கும் இலக்காகி இருக் கிறார்கள். இவர் சம்பந்தப்பட்டோ, அல்லது, இவருடைய அஜாக்கிரதையினாலோ நடந்துள்ள இவ்வளவு பெரிய அட்டுழியத்திற்கு இவரை மன்னித்து விடுவது தவறு. ஆகையால் இந்த திவானுக்கு நாம் பத்து வருஷ காலத்திற்குக் கடுங்காவல் தண்டனை கொடுப்பதோடு, இவருடைய சொத்துகள் முழுதையும்

70