பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திவான் லொடபட சிங் பகதூர்

பழிப்பும் இந்த உலகம் உள்ள வரையில் அழியாது என்பது நிச்சயமான சங்கதி. அப்பேர்ப்பட்ட தீராத மானக்கேட்டை உண்டாக்கி வைத்தவரான உம்மை நாம் மரண தண்டனைக்கே ஆளாக்க வேண்டும். அதற்கு சட்டம் இடந்தரவில்லை. ஆகையால், நாம் உம்மை இவ்வளவோடு விடுகிறோம். யாரடா ஜெவான்கள்! இவரைக் கொண்டு போங்கள்" என்றான். அந்த முடிவான உத்தரவைக் கேட்டவுடன் திவான் கண்ணீர் விடுத்துக் கோவெனக் கதறிஅழ ஆரம்பித்தார். அவரது உடம்பு காற்றிலசையும் நாணல் போலத் துவண்டு வளைந்து அங்குமிங்கும் சாய்கிறது. அங்கே கூடியிருந்த நகரத்து ஜனங்கள் எல்லோரையும் திவான் நிரம்பவும் பரிதாபகரமான பார்வையாகப் பார்க்கிறார்; வெட்கத்தினால் குன்றிப் போய்க் கீழே குனிகிறார். ஜனங்களோ தாங்கள் என்ன சொல்வது என்பதை அறியாதவர்களாய்த் தவித்துப் பதறி நிற்கிறார்கள். பாராக்காரர்கள் இருவர் திவானுக்கருகில் வந்து அவரைத் தொட்டு இழுக்க எத்தனிக்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஜனக்கும்பலுக்குள்ளிருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டு அவசரமாக வழி செய்துகொண்டு பைத்தியம் பிடித்தவன்போல சபைக்குள் நுழைந்து மகாராஜனுக்கு எதிரில் தைரியமாகப் போய் நின்று இரண்டு கைகளையும் எடுத்துக் குவித்து நிரம்பவும் பணிவாகக் குனிந்து வணங்கி, "மகாராஜனே! நான் இந்த சமஸ்தானத்திலுள்ள பிரஜைகளுள் ஒருவன். இந்தப் பத்து வருஷகாலமாக நம்முடைய சமஸ்தானத்தில் நடந்து வந்த விநோதக் கொள்ளையின் விஷயத்தில் தாங்கள் இப்போது வெளியிட்ட தீர்மான சம்பந்த மாக நான் ஒரு விக்ஞாபனம் செய்துகொள்ளப் பிரியப்படுகிறேன். மகாராஜன் கருணை கூர்ந்து அதற்கு அநுமதி கொடுக்கவேண்டும்" என்றான்.

அதைக் கேட்ட அரசன் திடுக்கிட்டு வியப்பும் ஆவலும் அடைந்தவனாய் நிமிர்ந்து அந்த மனிதனைப் பார்த்தான். பக்கங்களிலும் எதிரிலும் இலக்ஷக்கணக்கில் கூடியிருந்த உத்தியோகஸ் தர்களும் குடிஜனங்களும் அந்த மனிதன் எதைப்பற்றிப் பிரஸ்தாபிப்பானோ என்ற ஆவலும், ஆச்சரியமும் அடைந்து, அவனது வாயையே கவனமாய்ப் பார்க்கலாயினார். சபா மண்டபம்

72