பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

முழுவதும் நிச்சப்தமே குடிகொண்டது. மகாராஜன் அவனைப் பார்த்து, என்ன விண்ணப்பம்? சொல், கேட்கலாம்" என்றார்.

அந்த மனிதன், "மகாராஜனே! இந்த சமஸ்தானத்தில் சென்ற ஒன்பது வருஷகாலத்தில் தங்களுடைய உத்தரவுப்படி ஒழுங்காக வசூலிக்கப்பட்ட வரிகளில், செலவுகள் போக, ஆதாயம் எவ்வளவு என்பதைத் தாங்கள் கணக்கிட்டுப் பார்த்தீர்களா?” என்றான்.

அரசன்: பார்த்தோம். இந்த ஒன்பது வருஷத்தில் மொத்த ஆதாயம் 50 ஆயிரம் ரூபாய்.

அந்த மனிதன்: திவானுடைய கச்சேரியில் எத்தனை சிப்பந்திகள் வேலை பார்க்கிறார்கள்?

திவான்: என்னையும் சேர்த்து 753 சிப்பந்திகள் இருக்கிறார்கள். அந்த மனிதன் மகாராஜனே இந்த சமஸ்தானத்து அரசராகிய தங்களால் கிரமப்படி நியமிக்கப்பட்ட சிப்பந்திகள் 753 தான். அரூபியாக இருக்கும் திவான் லொடபட சிங் பகதூரினால் நியமிக்கப்பட்டிருக்கும் சிப்பந்திகளோ 3748 பேர்கள். 753 சிப்பந்திகளுக்கு ஆகும் செலவைவிட 3748 சிப்பந்திகளுக்குப் பல மடங்கு அதிகமாகவே செலவு பிடித்திருக்கும். அப்படி இருந்தும், அந்த, திவான் லொடபட சிங் பகதூர் மூன்று கோடியே முப்பத்தைந்து லக்ஷத்துப் பதினாயிரத்து அறுநூற்று முப்பத்தொன்பது ரூபாயும் சில்லரையும் மிச்சப்படுத்தி இருக்கிறார். தங்கள் திவானோ அரை லக்ஷம் ரூபாய்தான் மிச்சப்படுத்தி இருக்கிறார். தங்களுடைய திவான் நியாயமான துறைகளிலும், பயங்கரமான ஸ்தாபனங்களிலும் வரிகள் விதித்து சட்டப்பூர்வமாக வசூலித்திருக்கிறார். அரூபியான லொடபட சிங் பகதூரோ ரகஸியமாகவும், புதுமையாகவும் கேவலம் அற்ப சொற்பமான விஷயங்களுக் கெல்லாம் வரிகள் விதித்து, இன்னாரால் இத்தனை ஏற்பாடுகளும் செய்யப் படுகின்றன என்ற குறிப்பே எவருக்கும் தெரியாதபடி மறைந்திருந்து, கடவுளின் திருஷ்டி எவ்வளவு பூடகமாக இருக்கிறதோ, அது போல, அவர் சகலமான காரியங்களையும் அத்யாச்சரியகரமாக நடத்தி வந்திருக்கிறார். அவரது அபரிமிதமான செலவையும், ஆதாயத்தையும் பார்த்தால், அவர் ஜனங்களிடம்

73