பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

தெரிவித்தேன்; கேள்வி முறையில்லாமல் போய்விட்டது. ஆகவே, இது கேள்வி முறையற்ற தர்பார் என்றும், சாட்சியம், சட்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடங்கொடாமல், தோட்டி முதல் மகாராஜன் வரையில் கொள்ளை அடிக்கலாம் என்பதை மெய்ப்பித்துக் காட்டினால், அப்போதாவது இந்த நிர்வாகம் திருந்தாதா என்ற எண்ணத்தினாலேயே நமது திவான் லொடபட சிங் பகதூர் அரூபியாக இருந்து இப்படிப்பட்ட அதிதீரச் செய்கைகளைச் செய்து, காட்டி இருக்கிறார் என்றே நாம் எண்ணிக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்" என்றான்.

அதைக் கேட்ட மகாராஜன் திடுக்கிட்டு திக் பிரமை கொண்டான். அவனது மனத்தில் அபாரமான கோபமும் பதை பதைப்பும் பொங்கி எழுந்தன. கண்கள் கோவைப் பழமாய் சிவந்தன. மீசைகள் துடிக்கின்றன. கை கால்கள் பதறுகின்றன. அது போலவே மற்ற ஜனங்களும், உத்தியோகஸ்தர்களும், நமது சமயற்காரன் மீது ஆத்திரமும் அருவருப்பும் கொண்டு அவனைக் கசக்கிச்சாறு பிழிந்துவிட நினைப்பவர்போல முறைத்து முறைத்துக் கோபத்தோடு அவனைப் பார்க்கின்றனர்.

உடனே அரசன் மிகுந்த கோபாவேசத்தோடு சமயற்காரனை நோக்கி, "அடேய்! என்ன சொன்னாய்? நானா பொருளை அபகரித்தவன்? இதுவரையில் நீ பேசியதைக் கேட்டு நீ மகா புத்திமானென்று நான் நினைத்தேன். கடைசியாக நீ சொன்னதிலிருந்து நீ பைத்தியக்காரனென்றே இப்போது நினைக்க வேண்டியிருக்கிறது. யாரடா சேவகர்கள்? இந்தத் துடுக்கனை முதலில் வெளியில் கொண்டுபோய் விடுங்கள்" என்றார். உடனே நாலா பக்கங்களிலிருந்து சேவகர்கள் அம்புகள் போல அவன்மீது பாய்ந்து அவனை இறுகப் பிடித்துக் கொண்டனர்.

அவன் ஓங்கிய குரலில் பேசத்தொடங்கி, "மகாராஜனே! நான் வெளியில் போய்விடுகிறேன். ஆனால், ஜனங்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தஸ்தாவேஜாக மாறித் தங்கள் பெட்டியில் இருக்கிறது என்று மெய்ப்பிக்கவில்லை. தங்களுக்கு தைரியமிருந்தால் பெட்டியைத் திறந்து காட்டுங்கள்" என்று கூறினான். அதைக் கேட்ட அரசன் தாங்க வொண்ணாத பதைப்பும்

75