பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திவான் லொடபட சிங் பகதூர்

உண்மையாகிவிடாது; அது இல்லாவிடில், வழக்கு பொய்யாகி விடாது. சட்டத்தோடு நீதி என்ற முக்கியமான அம்சத்தையும் தாங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாட்சியின் மூலமாகவும், போலீசார் மூலமாகவும் வெளிப்படாத குற்றங்கள் எத்தனையோ செய்யப்படுகின்றன. அவைகளை நிறுத்துவதும் இராஜாங்கத் தாரின் தலைமையான கடமையே. முக்கியமாய்த் திருட்டு, கொள்ளை, மோசம் முதலிய குற்றங்கள் இல்லாக் கொடுமை யினாலும், ஏழ்மைத் தனத்தினாலும் செய்யப்படுகின்றன. ஆதலால், நம் தேசத்தில ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு வர்த்தகமோ, அல்லது, உத்தியோகமோ வகிக்கும்படி செய்ய வேண்டுவதும் துரைத்தனத்தாரின் அடிப்படையான கடமை. அதுவுமன்றி, ஒவ்வொருவனுக்குத் தத்தம் ஜாதிக்கேற்ற சமய நூல்களும், ஆசார வொழுக்கங்களைப் போதிக்கும் நூல்களும் போதிக்கப்பட வேண்டும். மனிதர் சிறு பிராயத்திலிருந்தே சன்மார்க்க நெறிகள் போதிக்கப்பட்டு, வயது காலத்தில், கண்ணியமான ஒரு துறையில் இறங்கி ஜீவனம் செய்யும்படியான வசதிகளை இராஜாங்கத்தார் கண்டு பிடித்து எல்லா ஜனங்களும் நல் வழியில் நடக்க ஒரு முக்கியமான தூண்டு கோலாக இருக்கவேண்டும். மனிதர்கள் அவரவர்களுடைய இச்சைப்படி நடக்கவிட்டு, அவர்கள் பல வகைப்பட்ட குற்றங்களைச் செய்யத்தக்க மனப்போக்கை உண்டாக்கி, அதன் பிறகு சட்டங்களைக் கொண்டு அவர்களைத் திருத்துவதென்பது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் சங்கதியே அன்றி வேறல்ல. ஆகையால் நம்முடைய இராஜ்யம் இனியாவது, வஸ்து வைவிட்டு அதன் நிழலைப் பிடிக்கிற முறைகளை விலக்கி, நல்வழிப்பட்டுச் செழித்தோங்க எல்லாம் வல்ல கடவுள் அநுக்கிரகிப்பாராக’ என்றார். -

உடனே மகாராஜன் எழுந்து நின்று ஜனங்களை நோக்கி, 'மகா ஜனங்களே! இந்த மகான் இப்போது நமக்குக் காட்டிக் கொடுத்த புத்தி மதியை நாம் பொன்போலப் போற்றிப் பாராட்ட வேண்டும். ஆனால் அவ்வளவு மேலான கொள்கைகளும் தத்து வங்களும் நம்முடைய தேசத்தில் நிலைத்து வேரூன்றும்படி செய்யத்தகுந்த யோக்கியதை வாய்ந்த திவான் வேறே யாருமில்லை. ஆதலால், அந்த ஸ்தானத்திற்கு இந்த நிமிஷம் முதல் இந்த

82