பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திவான் லொடபட சிங் பகதூர்

மகானையே நியமித்திருக்கிறேன். நமது வேண்டு கோளை உல்லங்கனம் செய்யாமல் அதை இவர்கள் ஏற்று நமக்கு நல்வழி காட்டி அருளுமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்" என்று கூறி முடித்தான். உடனே ஜனங்களெல்லோரும் கரகோஷம் செய்து ஆரவாரித்து அந்த வேண்டுகோளை முழுமனதோடு ஆமோதித்தனர். முதலில் நமது சமயற்காரர் சில உபசார வார்த்தைகள் கூறி மறுத்து, பிறகு பூலோகவிந்தை என்ற சமஸ்தானத்தின் திவான் வேலையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அவர் தாம் அந்தப் பத்து வருஷகாலத்தில் செய்த தந்திரங்கள் யாவற்றையும் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினார். தாம் தாசில்தார் முதலியோரை நியமித்ததுபோலவே, வேறு பல சேவகர்களையும் நியமித்து, அவர்கள் தமக்குக்கீழ் வேலை செய்யவேண்டுமென்று திவான் உத்தரவு செய்ததுபோல, உத்தரவுகள் பிறப்பித்து, அவர்களைக் கொண்டு தந்திரமாய்ப் பல காரியங்களை முடித்ததாகவும், அவர்களும் அரண்மனைச் சேவகர்களுக்குள் கலந்து கொண்டிருந்து வந்ததாகவும் கூறினார். மகாராஜன்பேரில் வாங்கப்பட்டிருந்த பத்திரங்களைக் கடைசிவரையில் தாமே வைத்திருந்ததாகவும், விஷயங்கள் வெளியானபிறகு ஒருநாள் இரவில் தாம் மகாராஜனது கொலுமண்டபத்தில் எவருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்து கைப் பெட்டிக்கு மறுதிறவுகோல் போட்டுத் திறந்து தஸ்தாவேஜிகளை அதற்குள் வைத்துப் பூட்டியதாயும் கூறினார். அவரது அதியாச்சரியகரமான செயல்களைக் கேட்டு அரசனும், மற்றவர்களும் அளவற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் வியப்பும் அடைந்து, அவரது அற்புத சாமர்த்தியத்தை மெய்ச்சிப் புகழ்ந்து அவரைப் பெரிதும் கொண்டாடினர். அதுவரையில் வேலை பார்த்த திவான் உண்மையில் யோக்கியதா பக்ஷமும், வாய்ந்தவரென்றும், அவர் நிரபராதி என்றும் நமது சமயற்காரரே கூறி அவரையும் தமக்கு அடுத்தபடியாக இருந்த ஒரு பெருத்த உத்தியோகத்தில் அமர்த்தினார். மேலக்கோட்டை வாசலிற்கருகிலிருந்த தமது கச்சேரியில் வேலை பார்த்த எல்லோருக்கும் பற்பல அபிவிர்த்தித் துறைகளில் உத்தியோகங்கள் கொடுத்தார்; அதுவுமன்றி, அந்த நகரத்தில் உத்தியோகமோ, வார்த்தகமோ, வேறு எவ்விதமான தொழிலோ இல்லாத சோம்பேறி மனிதரே இல்லாதபடி ஒவ்வொரு

83