பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

மனிதருக்கும் ஒவ்வொருவித அலுவலை ஏற்படுத்தினார். அவர் ஷெ பத்து வருஷகாலத்தில் தேடிக் குவித்த கோடிக்கணக்கான திரவியங்கள் முழுதையும் ஜனங்களின் பொது நன்மைக்காவே செலவிட்டு ஏராளமான குளங்கள், கிணறுகள், ரஸ்தாக்கள், நந்தவனங்கள் முதலியவற்றை உண்டாக்கினார். அந்த ஊரில் பிறக்கும் ஆண் பெண் குழந்தைகள் எல்லோருக்கும் பத்துவயது வரையில் தருமக் கல்வி கற்பிக்க ஏராளமான பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி, அவைகளில் சமய நூல்கள், சன்மார்க்க நூல்கள் முதலியவற்றைக் கட்டாய பாடங்களாக வைத்து, ஒவ்வொருவரது குணவொழுக்கங்களையும் சீர்திருத்துவதையே உபாத்தியாயர்கள் தமது பிரதமக் கடமையாக மதிக்கும்படி உத்தரவுகள் பிறப்பித்தார்; அவ்வூரிலுள்ள பெரியவர்கள் எல்லோரும் கண்ணியமான ஒவ்வொரு துறையிலும் இறங்கித் தமது ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்ளுவதற்கான எண்ணிறந்த வசதிகளைத் தேடி வைத்தார்.

இவ்வாறு நமது சமயற்கார திவான் தமக்கு மிஞ்சிய திறமைசாலியும் புத்திசாலியும் நீதிமானும் இந்த உலகத்தில் இல்லை என்று எல்லோரும் எப்போதும் ஓயாமல் புகழ்ந்து தம்மைக் கொண்டாடும்படி செய்து இன்னமும் நமது பூலோக விந்தையை ஆண்டுவருகிறார். அவருடைய ஆட்சியில் ஜனங்கள் எல்லோரும் மங்களகராமாகவும் சந்தோஷமாகவும் சுபீக்ஷகரமாகவும் இருந்து அமோகமாய் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவருடைய மனத்தில் ஒரே ஒரு சிறிய குறை இருந்துவருகிறது. ஆதியில் அவர் விநாயகரைத் தரிசித்துவிட்டுவந்த காலத்தில் வழியில் கண்டெடுத்த ரூபாயின் சொந்தக்காரர் இன்னார் என்பதை மாத்திரம் எவ்வளவு அபார சாமத்தியசாலியான அவரால் கண்டுபிடிக்க இன்னமும் இயலவில்லை. அந்த ரூபாய் வட்டியும் முதலமாக வளர்ந்து வருகிறது. அதன் சொந்தக்காரர் வந்து அதைப் பெற்றுக் கொள்ளுகிற வரையில் அதை அவர் தர்மத்திற்கு உபயோகித்து வருகிறதாகவும் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.

நமது சமயற்கார திவான் பத்து வருஷத்திற்குமுன் ஒருநாள் இரவில், அரிசி முதலிய சாமான்களைக் கொணர்ந்து கொடுத்து தமது குடும்பத்தினரின் உயிர்களைக் காத்து இரக்ஷத்த தயாளகுண-

84