பாண்டியர் வரலாறு
137
வழக்கிலிருந்தன. இவற்றுள், எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள் கழஞ்சு, காணம் என்னும் நிறை கற்களாலும், சர்க்கரை, காய் கறிகள், புளி முதலான பொருள்கள் துலாம், பலம் என்னும் நிறைகற்களாலும் நிறுக்கப்பட்டு வந்தன. அந்நாளில் சேர், வீசை, மணங்கு என்பவற்றால் நிறுக்கும் வழக்கமின்மை ஈண்டு அறியற்பாலது.
நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர், மிளகு, சீரகம், கடுகு முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரிநாழி, குறுணி என்னும் முகக்குங் கருவிகளால் அளக்கப்பட்டன.
எடுத்தல் அளவை
10 காணம் = 1 கழஞ்சு
100 பலம் = 1 துலாம்
முகத்தல் அளவை
8. நாணயங்கள்
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 நாழி
6 நாழி = 1 குறுணி
15 குறுணி = 1 கலம்2
பாண்டி வேந்தர்கள் ஆட்சிக் காலங்களில் பொன்னாலும் செம்பாலும் செய்யப் பெற்ற காசுகள் வழங்கிவந்தன. அவற்றுட் சில, இக்காலத்தும் சிற்சில இடங்களில் கிடைக்கின்றன. கடைச் சங்க நாளில் வழங்கிவந்த காசுகளைப் பற்றிய செய்திகள் இப்போது புலப்படவில்லை. பழைய பாண்டிய நாணயங்கள் சதுர வடிவமாக இருந்தன என்றும், அவைகளில் ஒரு பக்கத்தில் 1. S.I.I., V Nos. 737 and 749.
2. Epigraphia Indica, Vol. XXI, No.17. (page 105)