138
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
1
.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 யானை வடிவம் பொறிக்கப்பட்டிருந்த தென்றும் திரு. ஸி. ஜே. பிரவுன் தான் எழுதிய 'இந்திய நாணயங்கள்' என்ற நூலில் கூறியிருப்பது நம்பத்தக்கதாயில்லை. பொதுவாக நோக்குமிடத்து, பாண்டி மன்னர்களின் சிறப்புப் பெயர்களே அன்னோர் ஆட்சிக்காலங் களில் வழங்கிய நாணயங்களின் பெயர்களாக இருந்தன என்பது பல நாணயங்களாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படு கின்றது. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் அரசாண்டவனும் முதல் வரகுண பாண்டியன் புதல்வனும் ஆகிய சீமாறன் சீவல்லபன் காலத்தில் வழங்கிய நாணயம் ‘அவனிப சேகரன் கோளகை. என்ற பெயருடையதாயிருந்த தென்று தெரிகிறது. இவ்வேந்தனுக்கு அவனிப சேகரன் என்னும் சிறப்புப் பெயர் ஒன்று உண்டு என்பது புதுக்கோட்டை நாட்டில் சிற்றண்ணல்வாயில் என்ற ஊரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.3
2
முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் 'சோணாடு கொண்டான்' என்ற நாணயமும், முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் ‘எல்லாந் தலையானான்' என்ற நாணயமும், கி.பி. 1253-ல் முடிசூடிய சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில் வாளால் வழி திறந்தான் குளிகை என்ற பணமும். புதியனவாக வெளியிடப் பெற்று வழங்கிவந்தன.
பயர்கள் எல்லாம் பாண்டி வேந்தர்களின் சிறப்புப் பெயர்களாக இருப்பது அறியத்தக்கது.
5
அந்நாளில் வழங்கிய காசு ஒரு கழஞ்சு எடையுள்ளதாக இருந்தது. அக்காசின் ஒரு பக்கத்தில் விதானத்தின்கீழ் அமைந்த இரு கயல்களின் வடிவங்களும் மற்றொரு பக்கத்தில் அதனை வெளியிட்ட வேந்தன் பெயரும் மிளிர்வதைக் காணலாம்.
1. The Coins of India by Mr. C. J. Brown, page 62.
2. A. R. E for 1929-30, part II., para 4; Indian Antiquary, Vol. XXI. p. 323 3. Inscription No.368 of 1904; Annual Report on South Indian Epigraphy for 1905, page 55.
4. புதுக்கோட்டை நாட்டுக் கல்வெட்டுக்கள் நெ.439,440 5. Mysore Gazetter Vol. II. pp. 1260 and 1272.