பாண்டியர் வரலாறு
139
1
பத்துப்பொன் கொண்டது ஒரு காசு என்பது இரண்டாம் வரகுண பாண்டியனது திருச்செந்தூர்க் கல்வெட்டால் நன்கு உணரப்படும். பத்துக் காணம் கொண்டது. ஒரு கழஞ்சு என்பது முன்னரே விளக்கப்பட்டது எனவே, ஒரு பொன் ஒரு காணம் எடையுள்ளது என்பது வெளியாதல் காண்க. ஒரு காணம் நான்கு குன்றி எடையுடைது.
3
இனி, 'கையிலொன்றும் காணமில்லைக் கழலடி தொழுதுய்யினல்லால்’2 என்னும் சுந்ததரமூர்த்தி சுவாமிகள் திருவாக்கிலும், ‘ஈசன்றன்னையேத்தினவென்று-காசும் பொன்னுங் கலந்து தூவியும்’” என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கிலும், ‘ஏருடைய விழுக்கழஞ்சிற் - சீருடைய விழைபெற்றிசினே' என்னும் புறப்பாட்டடிகளிலும் காணம், கழஞ்சு, காசு, பொன் என்பவை பயின்று வருதல் காண்க.
9. கிராமசபை
பாண்டியரது ஆட்சிக் காலங்களில் ஊர்தோறும் கிராம சபையிருந்தது. இச்சபையினரே அங்கு நடைபெற வேண்டிய எல்லாவற்றையும் நிறைவேற்றி வந்தனர். சுருங்கச் சொல்லு மிடத்து, அந்நாளில் கிராம ஆட்சி முழுமையும் இச்சபையாரால் தான் நடந்தப்பட்டுவந்தது எனலாம். இச்சபையின் உறுப்பினர் எல்லோரும் பொதுமக்களால் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் ஆவர். சிற்றூர்கள் சிலவற்றை ஒன்றாகச் சேர்த்து அங்கும் கிராமசபை அமைத்து வந்தனர்
நிலமும் சொந்தமனையும் கல்வியறிவும் உடையவர் களாய் அறநெறி வழாது நடப்பவர்களே சபையின் உறுப்பினராதற்கு உரிமையுடையவர் ஆவர்.
கிராமசபையில் சில உட்கழகங்களும் இருந்தன. அவை, சம்வற்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்பன. நியாயம் வழங்குவதும்,
1. Epigraphia Indica, Vol. XXI, No.17.
2. திருவோணகாந்தன்றளிப் பதிகம், பா. 1.
3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, பா. 28, வரிகள் 39,40.
4. புறம். 11.