உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2


தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

குதிரைகள் வாங்குவதில் பெரும் பொருளைச் செலவிட்டு வந்தனர் என்று குறித்துள்ளமையாலும் பாண்டியர்களிடத்தில் சிறந்த குதிரைப்படை அந்நாளில் இருந்தது என்பது நன்கு அறியக் கிடக்கின்றது. அன்றியும், வாட்போரில் வல்ல வீரர்களடங்கிய பெரிய காலாட் படைகளும் இருந்தன. 'பெரும் படையோம்' என்று கையெழுத்திட்ட சில குழுவினர் பாண்டி மண்டலத்தில் கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருப்பது உணரற்பாலது. 'முனையெதிர்மோகர்' தென்னவன் ஆபத்துதவிகள்' என்னும் படைகளும் பாண்டியர்பால் இருந்தமை கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது. பாண்டியரது தலைநகராகிய மதுரையில் -ரோமாபுரிப் போர்வீரர்கள் கோட்டை வாயிலைக் காத்துவந்த செய்தி, 'கடிமதில் வாயிற் காவலிற் சிறந்த -அடல்வாள் யவனர்' என்று சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. 1 எனவே, கி. பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் மேனாட்டினரான உரோமாபுரி வீரர்கள் தமிழ் வேந்தரான பாண்டியரது படைகளில் போர் வீரர்களாக இருந்து வேலைபார்த்து வந்தனர் என்பது வெளியாதல் காண்க.

12. வாணிகமும் கைத்தொழிலும்

பாண்டி நாட்டில் முற்காலத்தில் வாணிகம் செழிப் புற்றிருந்தது என்பதற்கு மதுரை, கொற்கை முதலான நகரங் களிலும் அவற்றிற்கு அண்மையிலும் கிடைத்துள்ள அளவற்ற உரோமாபுரி நாணயங்களே சான்று பகரும். உள்நாட்டில் பண்டங்களை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குக் கொண்டு போய் விற்பதற்குப் பேருதவியாயிருப்பன அந்நாட்டிலுள்ள பல பெருவழிகளேயாகும். அத்தகைய பெரு வழிகள் பாண்டி நாட்டில் யாண்டும் இருந்தன. வணிகர் பண்டங்களை ஏற்றிச் செல்லுவதற்குக் கோவேறு கழுதைகளும் வண்டிகளும் பெரிதும் பயன்பட்டன. இடையில் களவு நிகழாதவாறு ன்றியமையாத இடங்களில் காவற்படைகள் அமைக்கப் பட்டிருந்தன. வணிகர்களும் பெருங்கூட்டமாகச் செல்வது வழக்கம். அக்கூட்டதிற்கு வாணிகச் சாத்து என்பது பெயராகும்.

1. சிலப்பதிகாரம், ஊர்காண்காதை-வரிகள் 66-67.