144
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
2
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
முத்துக்களும் பல்வகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப்பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும்' மது வகைகளும் கண்ணாடிச் சாமான்களும் கொற்கைப் பெருந் துறையில் வந்திறங்கின. அன்றியும், கீழ்நாடுகளிலிருந்து கர்ப்பூரம் முதலான பொருள்களும் அங்கு வந்திறங்கின. உள்நாட்டு வாணிகமும் புறநாட்டு வாணிகமும் செழித்திருந்தமையின், பாண்டி வேந்தர்க்குச் சுங்க வரியினால் ஆண்டுதோறும் மிகுந்த பொருள் கிடைத்து வந்தமை அறியற்பாலது.
கப்பல்கள் கடலில் திசை தடுமாறாமல் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்தசேருமாறு கொற்கை, தொண்டி முதலான கடற்கரைப் பட்டினங்களில் கலங்கரை விளக்கங்கள் (Light Houses, அமைக்கப்பட்டிருந்தன. வாணிகத்தின்பொருட்டு வெளிநாடு களிலிருந்து வந்திருந்த யவனரும்' சோனகரும் 4 பாண்டிநாட்டு மக்களோடு வேறுபாடின்றி இனிது வாழ்ந்துவந்தனர். எனவே, பாண்டிநாடு பழைய காலத்தில் கைத்தொழிலிலும் வாணிகத் திலும் சிறந்து விளங்கியமை காண்க.
13. கல்வி
பாண்டி வேந்தர்கள் சிறந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள் என்பது சங்கத்துச் சான்றோர் தொகுத்துள்ள தொகை நூல்களால் நன்கு துணியப்படும். 'ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவருள்- அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்' என்பது பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்று. மக்கட்குக் கல்வி இன்றியமையாதது என்னும் உண்மையை எவ்வளவு தெளிவாக இவ்வேந்தன் விளக்கியுள்ளான் என்பது ஈண்டு அறியத்தக்கது. தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஒருமுறை வஞ்சினங்கூற நேர்ந்த போது, 'உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பிற் -புலவர் பாடாது வரைகவென் நிலவரை' என்றுரைத்துள்ளமை இவன் புலவர் பெருமக்கள்பால் எத்துணை
1. மதுரைக் காஞ்சி, வரிகள் 321-323.
2. புறம்-56.
3. கிரேக்கரும் உரோமரும் சங்கநூல்களில் யவனர் என்று வழங்கப்பட்டுள்ளனர்.
4. சோனகர் என்பார் அராபியர் ஆவர்.