உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியர் வரலாறு

145


மதிப்பு வைத்திருந்தான் என்பதை இனிது விளக்குகின்றது. அறிஞர் பெருமான்களான இத்தகைய அரசர்கள் ஆட்சிபுரிந்த நாட்டில் கல்வி பரவியிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. புலவர் பெருமக்கள் பால் இவர்கள் காட்டிய அன்பும் ஆதரவும் அளவிட்டுரைக்கத் தக்கனவல்ல.

கடைச்சங்க காலத்தில் சமயம், குலம், தொழில் இவற்றில் எவ்வித வேறுபாடுமின்றி ஆண்பாலரும் பெண்பாலரும் கல்வி கற்றுச் சிறந்த புலமை எய்தியிருந்தனர் என்பது சங்க நூல்களால் பெறப்படுகின்றது.

முதல், இடை, கடை ஆகிய மூன்று தமிழ்ச் சங்கங்களும் பாண்டியர்களால் ஆதரிக்கப்பட்டு, நடைபெற்று வந்தன. முதற் சங்கத்தையும் இடைச் சங்கத்தையும் பற்றி ஆராய்ச்சியாளர் களுக்குள் கருத்து வேறுபாடும் ஐயமும் நிகழினும், கடைச் சங்கத்தைப் பற்றி ஐயுறவு ஏற்படுவதற்குச் சிறிதும் இடமில்லை. இஃது எவ்வாறயினும் பண்டைக் காலத்தில் மதுரைமா நகரில் தமிழ்ச்சங்கம் ஒன்று இருந்தது என்பதும், அது தமிழ்மொழி வளர்ச்சியில் ஈடுபட்டு உழைத்துவந்தது என்பதும் உண்மைச் செய்திகளேயாம்.

'பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ்'1 என்னும் ஒளவைப்பிராட்டியார் திருவாக்கும், 'வீயாத் தமிழுடையான்- பல்வேற்கடற்றானைப் பாண்டியன்' என்னும் பழம்பாடற் பகுதியும், 'தமிழ் நிலைபெற்ற தாங்கருமரபின்-மகிழ்நனை மறுகின் மதுரை” என்னும் இடை கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் கூற்றும், 'தமிழ்வையைத் தண்ணம்புனல் என்னும் பரிபாடற் பகுதியும் தமிழ் மொழி பாண்டிநாட்டில் முற்காலத்தில் எய்தியிருந்த உயர்நிலையை நன்கு விளக்குதல் காண்க. அன்றியும், புலவர் பெருமான்களாகிய ளங்கோவடிகளும் 5 சேக்கிழாரும் 6

1.

பத்துபாட்டு-நச்சினார்க்கினியர் உரை (மூன்றாம் பதிப்பு) பக்கம் 60.

2. யாப்பருங்கலவிருத்தி, பக்கம் 229.

3. சிறுபாணாற்றுப்படை, வரிகள் 66-67.

4. பரிபாடல்-பாடல் 6, வரி 60.

5. சிலப்பதிகாரம்- நாடுகாண்காதை, வரி 58.

6. பெரியபுராணம்-திருநாவுக்கரசுசுவாமிகள் புராணம், பாக்கள் 400, 421; மூர்த்திநாயனார்

புராணம் 12, 13