உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2


1

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 கம்பரும் பாண்டி நாட்டையே செந்தமிழ்நாடு என்று தம் அரிய நூல்களில் குறித்திருப்பது உணரற்பாலது. தமிழ் மொழிக்கு இருபெருங் கண்களாகவுள்ள தொல்காப்பியமும் திருக்குறளும் பாண்டியர் தலைமையில் அரங்கேற்றப் பெற்ற பெரு நூல்கள் என்பது கற்றோர் யாவரும் அறிந்ததேயாகும். எனவே, அந்நாளில் நம் தமிழ்த் தாய்க்குத் தொண்டுபுரிந்து பெருமையுற்றது பாண்டி மண்டலம் என்று கூறுவது சிறிதும் புனைந்துரையன்று.

இனி, தொடக்கக் கல்வி நாட்டில் பரவுவதற்குப் பாண்டியர்கள் புரிந்தன யாவை என்பது புலப்படவில்லை. ஆயினும், ஊர்தோறும் இளைஞர்கள் கல்வி கற்பதற்குப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. அவற்றை நிறுவி நடத்தி வந்த ஆசிரியன்மார் பாலாசிரியர் எனவும், கணக்காயர் எனவும் வழங்கப்பெற்று வந்தனர் என்பது சங்க நூல்களாலும் பல கல்வெட்டுகளாலும் அறியப்படுகின்றது. இளஞர்கட்குக் கல்வி கற்பித்துவந்த அந்தப் பாலாசிரியரும் கணக்காயரும் இயற்றிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை முதலான சங்க நூல்களில் காணப்படுகின்றன. எனவே, அக்காலத்தில் இளஞ்சிறார்க்கு எழுத்தறிவித்த ஆசிரியன்மாரும் சிறந்த புலவர்களாக இருந்தனர் என்பது தேற்றம்.

பாண்டிய அரசர்களும் மற்றையோரும் குல வேறுபாடு கருதாமல் கற்றவர்கள் எல்லோரையும் ஒருங்கே பாராட்டி மதித்துவந்தமையோடு அன்னோர்க்குப் பொருளுதவிபுரிந்தும் வந்தனர். முற்காலத்தில் நாட்டில் கல்வி பரவியிருந்தமைக்குக் கராணம் இதுவே யாகும்.

14. சமயநிலையும் கோயில்களும்

பாண்டியர் எல்லாரும் சைவர். பாண்டிநாட்டை உமா தேவியார் மீனாட்சியம்மை என்ற பெயருடன் ஆட்சிபுரிந்தனர் என்பதும் சிவபெருமான் அவ்வம்மையாரை மணந்து சோம சுந்தரபாண்டியர் என்னும் பெயருடன் அந்நாட்டை அர சாண்டனர் என்பதும் புராணச் செய்திகளாகும். பாண்டி நாட்டு 1. கம்பராமாயணம்-நாடவிட்ட படலம்.