உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2


தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 கோயில்களும் பொதுமக்களுக்குக் கடன் கொடுத்து உற்றுழி உதவி வந்தன. அவ்வாறு கொடுக்கப்பெற்ற கடன் தொகை களுக்குப் பலிசையாகக் கோயில்களுக்கு வேண்டப்படும் பண்டங்கள் வாங்கப் பெற்று வந்தன.

1

நாள்தோறும் உச்சியம்போதில் அடியார்களுக்குக் கோயில்களில் அன்னம் அளிப்பது வழக்கம். சில ஆலயங்களில் புத்தகசாலைகள் இருந்தன. அவற்றைப் பாதுகாத்தற்குப் பொதுமக்கள் பொருளுதவி புரிந்துள்ளனர் என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.

கோயிற் காரியங்களைச் சில ஊர்களில் அரசாங்க அதிகாரிகளும், வேறு சில ஊர்களில் ஊர்ச்சபையினரும் நடத்திவந்தனர் என்று தெரிகின்றது. அரசர்களும் பிற அரசியல் தலைவர்களும் நாட்டைச் சுற்றிப்பார்த்து வருங்கால், கோயில் களும் மற்ற அறநிலையங்களும் திட்டப்படி நடத்தப் பெற்று வருகின்றனவா என்று கண்காணித்து வந்தனர். தவறுகளும் ல்களும் காணப்படின் காணப்படின் கண்ணோட்டமின்றித் தக்க தண்டனை விதிப்பது உண்டு.

கோயில்தோறும் காணப்படும் எண்ணிறந்த கல்வெட்டுக்கள் நம் நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கு ஏற்ற கருவிகளாக அமைந்திருக்கின்றன. கோயிலைப் புதுப்பிக்க விரும்புவோர் முதலில் அரசாங்க உத்தரவு பெற்று, கல்வெட்டுக்களைப் படியெடுத்து வைத்துக் கொண்டு திருப்பணி முடிந்த பின்னர், அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் அவற்றை மீண்டும் எழுதுவித்தல் வேண்டுமென்பது அரசரது ஆணையாகும்.

15. சில பழைய வழக்கங்கள்

அரசர்கள் தாம் முடிசூடும் நாளில் இறை தவிர்த்தமையும், தம் சிங்காதனங்களுக்கு மழவராயன், காலிங்கராயன், முனைய தரையன், பல்லவராயன் எனப்பெயரிட்டு வழங்கியமையும் அரசர்கள் உத்தரவு பிறப்பிக்கும்போது இன்னவிடத்தில் இன்ன காரியம் செய்து கொண்டிருந்தபோது இவ்வாணை பிறந்த

1. Ins. 695 of 1916; Ins.277 of 1913.