உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2


சேர்க்கை 1

பாண்டிய மன்னர்களின் செப்பேடுகளும் மெய்க்கீர்த்திகளும்

1. நெடுஞ்சடையன் பராந்தகன் வேள்விக்குடிச் செப்பேடுகள்

கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந்தவிர்த்த பல்யாகமுதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதிராசனால் நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத கொற்கைகிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக் கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து வேள்விச்சாலைமுன்புநின்று வேள்விக்குடியென் றப்பதியைச் சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின் அளவரிய வதிராசரை யகலநீக்கி யகலிடத்தைக்

களப்பரனெனுங் கலியரைசன் கைக்கொண்டதனை யிறக்கியபின் படுகடன்முளைத் பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து

வேலைசூழ்ந்த வியலிடத்துக்

.....குறும்பும் பாவுடன் முருக்கிக்

...காலோச்சி வெண்குடை நீழற்

..காளி நிறைந்த தரணி மங்கையைப்

பாலுரிமை திறவிதி நீக்கித் தன்பா லுரிமை நன்கன மமைத்த

மானம் போர்த்த தானை வேந்தன்

ஒடுங்கா மன்ன ரொளிநக ரழித்த

கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன் மற்றவற்கு மகனாகி மகீதலம்பொதுநீக்கி மலர்மங்கையொடு மணனயர்ந்த