உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியர் வரலாறு

151


எத்திறத்து மிகலழிக்கு மத்தயானை மாறவர்மன் மற்றவர்க்கு, மருவினியவொரு

மகனாகி மண்மகளை மறுக்கடிந்து விக்கிரமத்தின் வெளிப்பட்டு

விலங்கல் வெல்பொறி வேந்தர் வேந்தன்

சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச்

செழியன் வானவன் செங்கோற் சேந்தன்

உதயகிரி மத்தியத் துறுசுடர் போலத்

தெற்றென்று திசைநடுங்க மற்றவன் வெளிப்பட்டுச்

சூழியானை செலவுந்திப் பாழிவா யமர்கடந்தும்

வில்வேலிக் கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும்

விரவிவந் தடையாத பரவரைப் பாழ்படுத்தும்

அறுகாலினம் புடைதிளைக்குங் குறுநாட்டவர் குலங்கெடுத்தும்

கைந்நலத்த களிறுந்திச் செந்நிலத்துச் செருவென்றும்

பாரளவுந் தனிச்செங்கோற் கேரளனைப் பலமுறையும்

உரிமைச் சுற்றமு மாவும் யானையும்

புரிசை ம(ா)மதிற் புலியூ ரப்பகல்

நாழிகை யிறவாமைக் கோழியுள் வென்றுகொண்டும்

வேலாழியும் வியன்பரம்பு

மேலாமைசென் றெறிந்தழித்தும்

இரணியகர்ப்பமுந் துலாபாரமுந் தரணிமிசைப் பலசெய்து

அந்தணர்க்கு மரசர்க்கும் வந்தணைகென் றீத்தளித்த

மகரிகையணி மணிநெடுமுடி

அரிகேசரி யசமசமன் சிரீமாறவர்மன்

மற்றவற்கு மகனாகிக் கொற்றவேல் வலனேந்திப்

பொருதூருங் கடற்றானையை மருதூருண் மாண்பழித்

தாய்வேளை யகப்பட வேயென்னாமை யெறிந்தழித்துச்

செங்கோட்டும் புதான்கோட்டுஞ் செருவென்றவர் சினந்தவிர்த்துக் கொங்கலரு நறும்பொழில்வாய்க் குயிலோடு மயிலகவும்

மங்கலபுரமெனு மாநகருண் மாரதரை யெறிந்தழித்

தறைகடல் வளாகம் பொதுமொழி யகற்றிச்

சிலையும் புலியுங் கயலுஞ் சென்று

நிலையமை நெடுவரை யிடவயிற் கிடாஅய்

மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோற்