உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2


தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

றென்ன வானவன் செம்பியன் சோழன்

மன்னர் மன்னன் மதுரகரு நாடகன்

கொன்னவின்ற நெடுஞ்சுடர்வேற்

கொங்கர்கோமான் கோச்சடையன்

மற்றவர்க்குப் புத்திரனாய் மண்மகளது பொருட்டாக

மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்திக்

கடுவிசையா லெதிர்ந்தவரை நெடுவயல்வாய் நிகரழித்துக் கறுவடைந்த மனத்தவரைக் குறுமடைவாய்க் கூர்ப்பழித்து மன்னிகுறிச்சியுந் திருமங்கையு முன்னின்றவர் முரணழித்து மேவலோர் கடற்றானையோ

டேற்றெதிர்ந்தவரைப் பூவலூர்ப் புறங்கண்டும்

கொடும்புரிசை நெடுங்கிடங்கிற் கொடும்பா ளூர்க்கூடார் கடும்புரியுங் கருங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும்

செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூருட்டேசழிய

எண்ணிறந்த மால்களிறு மிவுளிகளும் பலகவர்ந்தும்

தரியலராய்த் தனித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும்

பூவிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்

டழகமைந்த வார்சிலையின் மழகொங்க மடிப்படுத்தும் ஈண்டொளிய மணியிமைக்கு மெழிலமைந்த நெடும்புரிசைப்

பாண்டிக்கொடுமுடி சென்றெய்திப் பசுபதியதுபதுமபாதம் பணிந்தேத்திக் கனகராசியுங் கதிர்மணியு மனமகிழக் கொடுத்திட்டுங்

கொங்கரவ நறுங்கண்ணிக் கங்கராசனொடு சம்பந்தஞ்செய்தும் எண்ணிறந்தன கோசகசிரமு மிரணியகர்ப்பமுந் துலாபாரமும் மண்ணின்மிசைப் பலசெய்து மறைநாவினார் குறைதீர்த்துங்

கூடல்வஞ்சி கோழியென்னு மாடமாமதில் புதுக்கியும்

அறைகடல் வளாகங் குறையா தாண்ட

மன்னர் மன்னவன் றென்னவர் மருகன்

மான வெண்குடை மான்றேர் மாறன்

மற்றவற்கு மகனாகி மாலுருவின் வெளிப்பட்டு

மூன்று கொற்ற முரசுட னியம்பக்

குளிர் வெண்குடை மண்காப்ப

பூமகளும் புலமகளு நாமகளு நலனேத்தக்

கலியரசன் வலிதளரப் பொலிவினொடு வீற்றிருந்து

கருங்கட லுடுத்த பெருங்கண் ஞாலத்து

நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக்