உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2


தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

பல்படையொடு பார்ஞெளியப் பவ்வமெனப் பரந்தெழுந்து

குடபாலுங் குணபாலு மணுகவந்து விட்டிருப்ப

வெல்படையொடு மேற்சென்றங்

கிருவரையு மிருபாலு மிடரெய்தப் படைவிடுத்துக் குடகொங்கத் தடன் மன்னனைக் கொல்களிற்றோடுங் கொண்டுபோந்து

கொடியணிமணி நெடுமாடக் கூடன்மதி லகத்துவைத்தும் கங்கபூமி யதனளவுங் கடிமுரசுதன் பெயரறையக் கொங்கபூமி யடிப்படுத்துக் கொடுஞ்சிலைப்பூட் டிழிவித்துப்

பூஞ்சோலை யணிபுறவிற் காஞ்சிவாய்ப்பே ரூர்புக்குத் திருமாலுக் கமர்ந்துறையக்

குன்ற மன்னதோர் கோயிலாக்கியும்

ஆழிமுந்நீ ரகழாக வகல்வானத் தகடுரிஞ்சும்

பாழிநீண்மதில் பரந்தோங்கிப் பகலவனு மகலவோடும்

அணியிலங்கையி னரணிதாகி

மணியிலங்கு நெடுமாட மதில்விழிஞ மதுவழியக்

கொற்றவேலை யுறைநீக்கி வெற்றத்தானை வேண்மன்னனை

வென்றழித்தவன் விழுநிதியோடு குன்றமன்ன கொலைக்களிறுங்

கூந்தன்மாவுங் குலதனமு நன்னாடு மவைகொண்டும் அரவிந்த முகத்திளையவ ரரிநெடுங்க ணம்புகளாற்

பொரமைந்தர் புலம்பெய்தும் பொன்மாட நெடுவீதிக்

கரவந்தபுரம் பொலிவெய்தக் கண்ணகன்றதோர் கல்லகழோடு விசும்புதோய்ந்து முகிறுஞ்சலி னசும்பறாதவகன் சென்னி

நெடுமதிலை வடிவமைத்தும்

ஏவமாதி விக்கிரமங்க ளெத்துணையோ பலசெய்து

மணிமாடக் கூடல்புக்கு மலர்மகளோடு வீற்றிருந்து

மனுதர்சித மார்க்கத்தினார் குருசரிதங் கொண்டாடிக்

கண்டகசோதனை தான்செய்து கடன்ஞால முழுதளிக்கும் பாண்டிய நாதன் பண்டித வத்ஸலன்

வீரபுரோகன் விக்கிரம பாரகன்

பராந்தகன் பரம வைஷ்ணவன் றானாகி

நின்றிலங்கு மணிநீண்முடி நிலமன்னவ நெடுஞ்சடையற்கு

ராஜ்யவர்ஷம் -பதினேழாவது