பாண்டியர் வரலாறு
155
3. சடைய வர்மன் - பராந்தக பாண்டியன் செப்பேடுகள்
ஓங்குதிரை வியன்பரப்பில் உததிஆ லயமாகத் தேங்கமழு மலர்நெடுங் கட்டிசைமகளிர் மெய்காப்ப விண்ணென்பெய ரேயணிய மேகதாலி விதானத்தின் றண்ணிழற்கீழ் ஸஹஸ்ரபண மணிகிரணம் விளக்கிமைப்ப புஜங்கமபுரஸ் ஸரபோகி என்னும்பொங் கணைமீய்மிசைப் பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசைசெவிஉறப் பூதலமக ளொடுபூமகள் பாதஸ்பர் ஸனைசெய்யக் கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநாபி மண்டலத்துச் சோதிமர கததுளைத்தாட் சுடர்பொற்றா மரைமலர்மிசை விளைவுறுகளங் கமணியின்மேன் மிளிர்ந்திலங்கு சடைமுடிஓ டளவியன்ற கமண்டலுவோ டக்ஷமாலை ஒடுதோன்றின சதுர்ப்புஜந் சதுர்வ் வக்த்ரந்சதுர்வ் வேதிசதுர்த்வயாக்ஷந் மதுக்கமழ்மலர்க் கமலயோனி மனந்தந்த மாமுனி அத்ரி அருமரவிற் பலகாலந்தவஞ்செய்வுழி அவன்கண்ணி லிருள்பருகும் பெருஞ்சோதி இந்துகிரணம் வெளிப்பட்டனன் மற்றவற்கு மகனாகிய மனுநீள்முடிப் புதனுக்கு கற்றைச்செங் கதிர்க்கடவுள் வழிவந்த கழல்வேந்தன் ஏந்தெழிற்றோ ளினளொருநா ளீசனது சாபகெய்தி பூந்தளவ மணிமுறுவற் பொன்னாகிய பொன்வயிற்றுள் போர்வேந்தர் தலைபனிப்ப வந்துதோன்றிய புரூரவர்ப்பின் பார்வேந்த ரெனைப்பலரும் பார்காவல் பூண்டுய்த்தபின் திசையானையின் கும்பகூடத் துலவியசெழு மகரக்குலம் விசையொடுவிண் மீன்னொடுபோர் மிக்கெழுந்த கடற்றிரைகள் சென்றுதன்சே வடிப்பணிய அன்றுநின்ற ஒருவன்பின் விஞ்சத்தின் விக்ஞாபணை யும்பெறலரு நகுஷன்மதவிலாசமும் வஞ்சத்தொழில் வாதாபி சீராவியு மஹோததிகளின் சுருங்காத பெருந்தன்மையும் சுகேதுசுதை சுந்தரதையு மொருங்குமுன்ன மடிநண்ண திருமேனி உயுதலத்தோன் மடலவிழ்ஆ மலுய்த்து மாமுனிபுரோ கிதன்னாகக்
கடல்கடைந் தமிர்துண்ணவுங் கயலிணைவட வரைப்பொறித்தும் ஹரிஹயந தாரம்பூண்டு மவன்முடிஒடு வளைஉடைத்தும்