உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியர் வரலாறு

161


வரிவண்டு மதுநுகர்பொழிற் சிரீவல்லப மங்கலத்து செப்பரிய செழுஞ்செல்வத் துப்பமவிரால் மேதக்க 200 கலையில் கணஸ்வாமிபட்டற்கு தற்பெரு மாமதலை உலவுசீர்த்தி யோகேஸ்வர பட்டற்கு விசிஷ்டனாகிய திருவடிச் சோமாசியென்னுஞ் சீர்மறையோன் மகள்பயந்த திருமருசீர்ச் சிரீமாதவன் ஸ்ரீமாதவ சரணேஸ்வரன் வேதவேதாங்கங்களும் விவிதாசாரமும் தன்னொடுபிற

205 ரோதிக்கேட்டு தரப்பெய்த நீரைக்காமா சால்யனாகி பெருந்தகைப் பிரமதேயமிதற்கு பிரஸஸ்தி செய்தோற்கு திருந்தியநன் பெருவயக்கலும் செழும்புனற் பருத்திவயக்கலும் இவ்வயல்களில் கிணறிரண்டும் அக்கிணற்றால் விளைநிலனும் மற்றவ்வூர் மாசபை ஓர்பெற்றபரிசேய் கொடுத்தபின்

210 சீரியசெழும் பணிஇதற்குச் செப்பேடு வாசகத்தை ஆரியம்விராய்த் தமிழ்தொடுத்த மதிஓற்கும் அதுஎழுதிய கற்பமைந்த கதலத்துவரச் சிற்ப மார்த்தாண்டற்கும் மண்ணெங்கும் நிறைந்தவான் புகழ் கண்ணங்கீரன்வயக்கல் திருஉலகு நற்சிங்க குளவளால் மருவியசோ

215 மாசிவயக்கல்லென்னும் வயல்களிற் கிணறுகள் ளொருமூன்றும்

எக்காலமும் மன்னுக்கிணற்றில் விளைவயலனைத்தும் இறையிலியாகவும் சொல்லிய இக்கிணறு மூன்றின்னிடைக் கிடந்ததொன் னிலமுழுவதும் இல்லவளா லதுவாகவும் எழின் மிக்கதோட்டமாகவும்

பால்லெருமை பெருவராலுகள் புனற்பதி இதனிற்

220 கோல்லுரிமையிற் செம்பாகமும் மஹாசபை குறிப்பொடு கொடுத்துப் பகல்செய்யும் பருதிஞாயிறும் இரவுச்செய்யும் பனிமதிஉம்

அகல்ஞாலமும் உளவளவும் செப்பேடு செய்துகொடுத் தருளினன் மணிநீழ்முடி மன்பணிகழல் வசுதாதிப வாசுதேவன் அணிநீள வுய்த்தஹிதாகனி அசலாசலன் நவர்ஜ்யன்

225 கொந்தலர்தார் கோச்சடையன் கூடற்கோன் குருசரிதன் செந்தமிழ்க்கோன் ஸ்ரீநிகேதனன் ஸ்ரீபராந்தக மகராஜன் தேர்மிகுமாக் கடற்றானைத் தென்னவர்கோன் றிருவருளாற் சீர்மிகு செப்பேட்டுக்குச் செந்தமிழ்பாத் தொடைசெய்தோன் க்ர்தஉகமெனும் ஊழிக்கண் அவிர்சடை முடிஅரன்வேண்ட