162
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
230 நற்பரசு நிர்ம்மித்தவ னளிர்சடைமே லலங்கல்பெற்ற
மாமுனிவன் வழிவந்தோன் பாமரு பண்டிதராசன்
பொன்வரன்றி மணிவரன்றி அகிலவரன் றிக்கரை பொருபுனற் றென்வைய்கை வளநாடன் செழுங்குண்டூர் நகர்த்தோன்றல் பாண்டித்தமி ழாபரண னென்னும்பல சிறப்புப் பெயரெய்திய
235 பாண்டிமாராயப் பெருங் கொல்லனாகிய சிரீவல்லபன் தென்னவர்தந் திறலாணைச் சிலைஒடுபுலி கயலிணைமன் பொன்னிமையச் சிமையத்து விறற்கருவியிற் றைக்குந் தொழில்செய்து வந்தவபின் னோன்செயல்பல பயின்றோர் முன்னோன் திருமலி சாசன மிதற்குச் செழுந்தமிழ்பா டினோனற்றை 240 நிருப சேகரப் பெருங்கொல்லன் நீள்புகழ் நக்கனெழுத்து. 4. மூன்றாம் இராசசிங்க பாண்டியன் சின்னமனூர்ச் செப்பேடுகள்
திருவொடுந் தெள்ளமிர்தத்தொடுஞ் செங்கதிரொளிக் கௌஸ்துபத்தொடும் அருவிமத களிறொன்றொடுந் தோன்றியர னவிர்சடைமுடி
வீற்றிருந்த வெண்டிங்கள் முதலாக வெளிப்பட்டது
நாற்றிசையோர் புகழ்தர நானிலத்தி னிலைபெற்றது பாரத்துவா சாதிகளால் நேராக ஸ்துதிக்கப்பட்டது விரவலர்க்கரியது மீனத்வயாஸனத்தது
பொருவருஞ்சீ ரகத்தியனைப் புரோகிதனாகப்பெற்றது ஊழியூழி தோறுமுள்ளது நின்றவொருவனை யுடையது வாழியர் பாண்டியர் திருக்குலமிதினில் வந்துதோன்றி
வானவெல்லை வரைத்தாண்டும் வளைகடல்கடைந் தமிர்தங்கொண்டும் நானிலத்தோர் விஸ்மயப்பட நாற்கடலொரு பகலாடியும் மங்கிலொளி மணிமுடியொடு சங்கவெள் வளைதரித்தும் நிலவுலகம் வலஞ்செய்தும் நிகரில்வென்றி யமரர்க்குப் பலமுறையுந் தூதுய்த்தும் பாகசாஸன னாரம்வவ்வியுஞ் செம்மணிப்பூ ணொடுந்தோன்றித் தென்றமிழின் கரைகண்டும் வெம்முனைவே லொன்றுவிட்டும் விரைவரவிற் கடன்மீட்டும் பூழியனெனப் பெயரெய்தியும் போர்க்குன் றாயிரம்வீசியும் பாழியம்பா யலினிமிர்ந்தும் பஞ்சவனெனப் பெயர்நிறீஇயும்
வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும் உளமிக்க மதியதனா லொண்டமிழும் வடமொழியும்