பாண்டியர் வரலாறு
163
பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரின் மேந்தோன்றியும்
மாரதர்மலை களத்தவியப் பாரதத்திற் பகடோட்டியும் விசயனை வசுசாபநீக்கியும் வேந்தழியச் சுரம்போக்கியும்
வசையில்மாக் கயல்புலிசிலை வடவரைநெற் றியில்வரைந்துந் தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பலதிருத்தியும் அடும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சத் திரமுயர்த்தும் தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக் கொலைவாளிற் றலைதுமித்தும் குறைத்தலையின் கூத்தொழித்தும் மகாபாரதந் தமிழ்ப்படுத்து மதுராபுரிச் சங்கம்வைத்தும் மகாராசரும் சார்வபௌமரும் மகீமண்டலங் காத்திகந்தபின் வில்லவனை நெல்வேலியிலும் விரிபொழிற் சங்கரமங்கைப் பல்லவனையும் புறங்கண்ட பராங்குசன் பஞ்சவர்தோன்றலும் மற்றவர்க்குப் பௌத்ரனாயின மன்னர்பிரா னிராசசிங்கனுங் கொற்றவர்க டொழுகழற்காற் கோவரகுண மகாராசனும் ஆங்கவற் காத்மசனாகி யவனிதலம் பொறைதாங்கித் தேங்கமழ்பொழிற் குண்ணூரிலுஞ் சிங்களத்தும் விழிஞத்தும்
வாடாத வாகைசூடிக் கோடாதசெங் கோனடப்பக்
கொங்கலரும் பொழிற் குடமூக்கிற் போர்குறித்து
வந்தெதிர்ந்த கங்கபல்லவ சோளகாலிங்க மாகதாதிகள்
குருதிப்பெரும் புனற்குளிப்பக் கூர்வெங்கணை தொடை நெகிழ்த்துப்
பருதியாற்ற லொடுவிளங்கின பரசக்கிர கோலாகலனுங்
குரைகழற்கா லரைசிறைஞ்சக் குவலைதலாந் தனதாக்கின்
வரைபுரையு மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மனும்
மற்றவனுக் கிளையனான மனுசரிதன் வாட்சடையன்
பொற்றடம்பூண் சிரீபராந்தகன் புனைமணிப்பொன் முடிசூடிக் கைந்நிலந்தோய் கரிகுலமும் வாசிவிருந்தமுங் காலாளும் செந்நிலத்தி னிலஞ்சோத் திண்சிலைவாய்க் கணைசிதறியும் கரகிரியிற் கருதாதவர் வரகரிகுல நிரைவாரியும் நிலம்பேர நகர்கடந்து நெடும்பெண்ணா கடமழித்தும் ஆலும்போர்ப் பரியொன்றா லகன்கொங்கி லமர்கடந்தும் தேவதானம் பலசெய்தும் பிரமதேயம் பலதிருத்தியும் நாவலந்தீ வடிப்படுத்த நரபதியும் வானடைந்தபின் வானவன்மா தேவியென்னு மலர்மடந்தை முன்பயந்த மீனவர்கோ னிராசசிங்கன் விகடபா டலனவனே
அகிபதியா யிரந்தலையா லரிதாகப் பொறுக்கின்ற