உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியர் வரலாறு

165


பறைபேர்த்துக் கன்னாட்டிப் பண்டுள்ள பேர்தவிர்த்து அளப்பனவுநிறுப்பனவுங் கயலெழுதி யனந்தபுரத் தெம்மாற்கு நிலவியபொன் மணிவிளக்கு நின்றெரியப் பத்தமைத்து

தைப்பூசப் பிற்றைஞான்று

வந்திருந்தா ரெல்லார்க்குமாற்றாதே தியாகமிட அறத்தால் விளங்கிய வாய்ந்த கேள்விப்

புறத்தாய நாடு பூமகட் களித்துத்

தெலிங்க வீமன் குளங்கொண்டு தென்கலிங்க மடிப்படுத்துத் திசையனைத்து முடனாண்டசிரீபராந்தகதேவர்க்குயாண்டு.

6. வீரபாண்டியன் மெய்க்கீர்த்தி

பூமடந்தையுஞ் சயமடந்தையும் பொலிந்துதிருப் புயத்திருப்பப் பார்முழுதுங் குடைநிழற்றப் பராக்கிரமத்தான் முடிசூடித் தென்மது ராபுரித் திருவிளையாட்டத்திற்கண்டு மன்னரெல்லாம் வந்திறைஞ்ச மலைநாடு கொண்டருளி மாபா ரதம்பொருது மன்னவர்க்குத் தூதுசென்று தேவாசுர மதுகைதரித்துத் தேனாருமறையுள் கொண்டருளி

வடவரையிற் கயல்பொறித்து வானவர்கோ னாரம்பூண்டு திடவாசகக் குறுமனிபாற் செந்தமிழ்நூல் தெரிந்தருளி செங்கோ லெங்குந் திசையுற நடாத்தி

மன்னிய வீரசிம்மா சனத்தில்

திரைலோக்யமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளி

மாமுதன் மதிக்குலம் விளக்கிய கோமுதற் கொற்றவன்மரான

திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீவீரபாண்டியதேவர்.

7. மாறவர்மன் சுந்தரபாண்டியன் I மெய்க்கீர்த்தி

பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப நாமருவிய கலைமடந்தையுஞ் சயமடைந்தையு நலஞ்சிறப்பக் கோளார்ந்த சினப்புலியுங் கொடுஞ்சிலையுங் குலைதொளிப்ப

வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட

இருங்கடல் வலயத் தினிதறம் பெருகக்

கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப

ஒருகுடை நீழ லிருநிலங் குளிர

மூவகைத் தமிழு முறைமையின் விளங்க