168
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
ஆறாத பெருநண்பி னவன்சிறையு மீட்டுத் திருமாலும் நான்முகனுஞ் சேவிப்பச் செங்கட் கருமால் களிற்றில்வரு முக்கட் கடவுளென மாட மதுரையிற் றான்போந்து புவனியிலே கூடவிரு கொங்கரையுங் கும்பிடுகொண் டவர்தந்த தொல்லைப் புவிக்கு மிணங்காமற் றாம்சொன்ன எல்லைக் குணிற்ப இசைந்திட்டு மேற்கொண் டிவனது செய்யா தொழில் யமனுக்கு
வெவ்வேல் விருந்தாக்குது முமையென விட்டருளி முன்னம் நமக்கு முடிவழங்குஞ் சேவடிக்கீழ் இன்னம் வழிபடுவ மென்னாது பின்னொருநாள்
காவ லெனதுபுனல் நாடெனுங் களியால் ஏவலெதிர் கொள்ளா திறைமறுத்த சென்னிவிடு தூசியும் பேரணியு மொக்கச் சுருண்டொதுங்கி வாசியும் வாரணமுந்தேரு மடற்கருங்
காலாளும் வெட்டுண்ணக் கண்டுபயங் கைக்கொண்டு
வேலா வலயத்து வீழ்ந்தவன்போய் மெய்நடுங்க
அம்பருந்து மார்த்தகடல் மண்ட லிகருடல்
வெம்பருந் துண்ண அக்களத்தில்
ஆனையின் வெண்மருப்புங் கையுங்குறைத் தெங்கள்
மீனவர்க்குப் பாகுடமா மென்றுதம் வீரர்கொள
மாக முகடு தடவி மழைதடுக்குங்
காக நெடும்பந்தர்க் கவந்தத்தி னாடலுங்,
கூகையின் பாடலுங் கண்டுங் கேட்டுங்
களித்தடல் கருங்கூந்தல் வெள்ளெயிற்றுச் செவ்வாய்ப்பொற்
சூலக்கை வல்லி பலிகொள்க எனவாழ்த்தி
வென்று பகையின் மிகையொழிய வேந்தலறக்
கொன்று சினந்தணியாக் கொற்றநெடு வாள்உயற்கு
செங்குருதி நிறத்தொளி செய்து தெவ்புலத்து
வெண்கவடி வித்த வீர முழுதெடுத்துப் பாடும் பரணிதன் பார்வேந்தர் கேட்பிக்க ஆடுந் திருமஞ்சன நீரில் மண்குளிர ஓங்கு ரிமைக்குழா மொருங்கு கைக்கொண்டு மூரிமணிப் பட்டங் கட்டி முடிசூட்டி
மார்பி லணைத்து வளவன்முதல் தேவியென்று