உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2


.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

வேந்தர்கண் டறியா விறற்றிண் புரிசைச்

சேந்த மங்கலச் செழும்பதி முற்றிப் பல்லவ னடுங்கப் பலபோ ராடி

நெல்விளை நாடு நெடும்பெரும் பொன்னும்

பரும யானையும் பரியு முதலிய

வரசுரிமை கைக்கொண்ட ரசவற் களித்துத் தில்லையம் பலத்துத் திருநடம் பயிலுந் தொல்லை யிறைவர் துணைகழல் வணங்கிக் குளிர்பொழில் புடைசூழ் கோழிமானகர் (அளி)செறி வேம்பி னணிமலர் கலந்த தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித் திங்களுயர் மரபு திகழவந் திருந்த தன்னசையா னன்னிலை விசையம்பின் எண்ணெண் கலைதே ரின்மொழிப் பாவலர் மண்ணின்மே லூழி வாழ்கென (வாழ்)த்தக் கண்டவர் மனமுங் கண்ணுங் களிப்ப வெண்டிரை மகர வேலையி னெடுவரை யாயிரம் பணைப்பணத் தனந்தன் மீமிசைப் பாயல் கொள்ளும் பரமயோகத் தொருபெருங் கடவு ளுவந்தினி துறையு மிருபெருங் காவிரி யிடைநிலத் திலங்குந்

திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்பப் பன்முறை யணிதுலா பாரமேறிப்

பொன்மலை யென்னப் பொலிந்து தோன்றவும்

பொன்வேய்ந் தருளிய செம்பொற் கோயிலுள்

வளந்திகழ் மாஅ லுதைய வெற்பெனத்

திருவளர் குலமணிச் சிங்கா சனமிசை

மரகத மலையென மகிழ்ந்தினி தேறித்

தினகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும் கனகமாமுடி கவின்பெறச் சூடிப் பாராள் வேந்த ருரிமை யரிவைய ரிருமருங்கு நின்று விரிபெருங் கவரியின்

மந்தளிர்க் கரங்கொண் டசைய வீச மந்த வாடையு மலையத் தென்றலு ஒருபொழு தும்விடா துடனிருந்து மகிழும்