பாண்டியர் வரலாறு
173
திருமக னென்னத் திருத்தோள் மேவி யொத்த முடிசூடி யுயர்பே ராணை திக்கெட்டும் நடப்பச் செழுந்தவஞ் செய்த இவன்போ லுலகிலே வீரன்(பலத்திர) மதிமுகத் தவனி மாமக ளிலகு
கோடிக் காதல் முகிழ்த்துநின் றேத்தும்
உலகுமுழுது முடையாளொடும் வீற்றிருந் தருளிய
சிரீகோச்சடைய வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
சிரீசுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு-
10. மாறவர்மன் குலசேகரபாண்டியன் மெய்க்கீர்த்தி
தேர்போல லல்குற் றிருமகள் புணரவும்
கார்சேர் கூந்தற் கலைமகள் கலப்பவும்
பார்மகள் மனத்துப் பாங்குட னிருப்பவும்
செங்கோ னடப்பவும் வெண்குடை நிழற்றவும் கருங்காலி முருங்கவும் பெரும்புகழ் விளங்கவும் கானிலை செம்பியன் கடும்புலி யாளவும் மீனம் பொன்வரை மேருவி லோங்கவும் முத்தமிழ் மனுநூலு நான்மறை முழுவதும் எத்தவச் சமயமும் மினிதுடன் விளங்கவும் சிங்கணம் கலிங்கந் தெலிங்கஞ் சேதிபம் கொங்கணங் குதிரம் போசளங் குச்சரம் முறைமையினாளு முதுநல வேந்தர் திரைமுறை காட்டிச் சேவடி வணங்க மன்னர் மாதர் பொன்னணி கவரி இருபுடை மருங்கு மொருபடி யிரட்டப் பழுதறு சிறப்பிற் செழுவை காவலன் வீரசிங் காதனத் தோராங் கிருந்தே யாரும் வேம்பு மணியிதழ் புடையாத் தாருஞ் சூழ்ந்த தடமணி மகுடம் பன்னூ றூழி தொன்னிலம் புரந்து
வாழ்கென மகிழ்ந்துடன் சூடி
.....................[D