176
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
சேர்க்கை 2
கல்வெட்டுக்களிலுள்ள பாண்டியரைப்பற்றிய
சில பாடல்கள்
சடையவர்மன் சுந்தரபாண்டியன் I
1. வட்ட வெண்குடை மன்னர் தம்புகல் கொண்டு மாமுடி கொண்டுபோர்
மாறு கொண்டெழு போசளன்றடை கொண்டுவாணன் வனம்புகத் தொட்ட வெம்படை வீரன்வென்றி
புனைந்த சுந்தர மாறன்முன் சூழ விட்ட தெலுங்கர் சேனை
துணித்து வென்றவெங் களத்துமேல்
விட்ட வெம்பரி பட்ட போதெழு
சோரி வாரியை யொக்குநேர்
மேன்மி தந்தநி ணப்பெ ருந்திரள்
வெண்ணு ரைத்திர ளொக்குமுன்
பட்ட வெங்கரி யந்த வாரி
படிந்த மாமுகி லொக்கும்வீழ் பரும ணிக்குடை யங்கு வந்தெழு
பருதி மண்டில மொக்குமே.
2. காரேற்ற தண்டலைக் காவிரி நாடனைக் கானுலவுந் தேரேற்றி விட்ட செந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்ந்து தாரேற்ற வெம்படை யாரியர் தண்டு படத்தனியே போரேற்று நின்ற பெருவார்த்தை யின்னும் புதுவார்த்தையே.
3. பண்பட்ட மென்மொழிப் பைந்தொடி கொங்கை பராக்கவைவேற் கண்பட்ட முத்த வடங்கண்டுங் காக்கிலன் காடவர்கோன் எண்பட்ட சேனை யெதிர்பட் டொழுக வெழுந்தபுண்ணர் விண்பட் டலையப் படைதொட்ட சுந்தர மீனவனே.
(1-5) S.I.I., Vol. IV, Nos. 618-620; செந்தமிழ் தொகுதி IV, பக்கங்கள் 491-493.